மயங்கி விழுந்த சமீரா!
ஓயாத படப்பிடிப்பு, பயணம் காரணமாக படப்பிடிப்புத் தளத்தில் மயங்கிச் சரிந்தார் நடிகை சமீரா ரெட்டி.
தமிழில், தெலுங்கு, இந்தி என பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் சமீரா ரெட்டி. தமிழில் இப்போது பிரபு தேவா இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை புறநகரில் நடந்து வருகிறது.
நேற்றைய படப்பிடிப்பு வெட்டவெளியில் நடத்தப்பட்டது. கடும் வெயில் மற்றும் பயணக் களைப்பு காரணமாக, படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார் நடிகை சமீரா ரெட்டி.
உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அவரைப் பரிசேதித்த மருத்துவர்கள், கட்டாயம் ஒருவார காலத்துக்கு ஓய்வு அவசியம் என்று கூறிவிட்டனர்.
இதனால் படப்பிடிப்பையே ரத்து செய்தார் பிரபுதேவா.


Click it and Unblock the Notifications











