»   »  சமிக்ஷா தந்த ஷாக்!

சமிக்ஷா தந்த ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா, மாதவன் நடிக்க உருவாகி வரும் ஆர்யா படத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார் சமிக்ஷா. அவருக்குப் பதிலாக தேஜஸ்ரீ புக்செய்யப்பட்டுள்ளாராம்.

பாலசேகரன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குவது பாரதிராஜாவின் மச்சான் மனோஜ்குமார். ஆடிக்கு ஒரு படம் அமாவாசைக்கு ஒருபடம் இயக்கும் டைரக்டர் இவர்.

இந்தப் படத்தில் கிளுகிளு கும்மாங்குத்து வேடத்துக்காக சமிக்ஷாவை புக் செய்திருந்தனர். சமிக்ஷாவுக்கும் அது ரொம்பவே பிடித்த கேரக்டர்என்பதால் டபுள் ஓகே சொல்லிவிட்டு அட்வான்ஸாக ரூ. 50,000த்தை வாங்கிப் போட்டுக் கொண்டார். சம்பளமாக ரூ. 3 லட்சம் பேசப்பட்டதாகத்தெரிகிறது.

இதற்காக சமிக்ஷா 10 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், அவர் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை. எல்லாம் பைனான்ஸ் பிரச்சனைதான் காரணமாம். இதனால் சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

10 நாள் வரை பொறுத்த சமிக்ஷா சொல்லாமல் கொள்ளாமல் தனது ஊரான மும்பைக்குப் போய்விட்டார்.

இந் நிலையில் கொஞ்சம் பணத்தை புரட்டிய தயாரிப்பாளர் சூட்டிங்கை மீண்டும் தொடங்கினார். இயக்குனர் மனோஜ் குமார் நடிகர், நடிகைகளுக்குபோனைப் போட்டு வரச் சொல்ல முயன்றார்.

அப்போது தான் தெரிந்தது சமிக்ஷா ஊரிலேயே இல்லை என்பது. இதனால் அவரை காச் மூச் என்று கத்திக் குமிக்க கடுப்பாகிப் போன சமிக்ஷா,ஹவ் மெனி டேஸ் கேன் ஐ வெய்ட்?, நீங்க எப்போ சூட்டிங் தொடங்குகிறது. நான் அதுவரை அங்க என்ன பண்றது? ஹோட்டலுக்கு யாரு பில்கட்றது என்று கத்தியிருக்கிறார்.

இதையடுத்து நடிக்க முடியுமா முடியாதா என்று மதுரை ஸ்டைலில் மனோஜ்குமார் கேட்க, முடியவே முடியாது என்று மும்பை ஸ்டைலில்சொல்லிவிட்டார் சமிக்ஷா.

உடனே இப்பிடியாப்பட்ட ரோலுக்காகவே கோலிவுட்டில் வூடு கட்டி கும்மியிருக்கும் தேஜாஸ்ரீயை நோக்கிப் போய் அவரை படத்துக்கு புக்செய்துவிட்டார்களாம்.

இதன் பின் சென்னை வந்த சமிக்ஷா, தயாரிப்பு தரப்பை கூப்பிட்டு தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்துவிட்டார்.

ஆனால், இன்னொரு சிக்கல். சமிக்ஷா நடிப்பார் என்று நம்பி அவரது அளவுக்கு ஏற்றபடி ஏகப்பட்ட டிரஸ்களை வாங்கியிருந்தார்கள். அந்தடிரஸ்கள் எல்லாம் தேஜஸ்ரீக்கு சரியாக பொருந்தவில்லை.

இதையடுத்து சமிக்ஷாவைக் கூப்பிட்டு உன்னால எங்களுக்கு ரூ. 20,000 காஸ்ட்யூம் வேஸ்ட் என இயக்குனர் திட்ட, அடுத்த சில மணி நேரத்தில்அங்கு வந்த சமிக்ஷா அந்த இத்தினுகூண்டு டிரஸ்களை அள்ளி எடுத்துக் கொண்டு ரூ. 20,000த்தை இயக்குனர் கையில் திணித்துவிட்டுப்போனாராம்.

இப்படியும் ஒரு ஸ்டிரைட் பார்வர்ட் நடிகையா என்று கோலிவுட்டில் குந்தி உட்கார்ந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil