»   »  சொதப்பும் சாம்னா

சொதப்பும் சாம்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பகடை படத்தின் நாயகி சாம்னா மீது பகடை யூனிட் படா கடுப்பாக உள்ளதாம்.

என்.டி.ஆரின் பேரன் தாரகரத்னா ஹிரோவாக நடிக்க உருவாகும் படம் பகடை. இதில், ராஜ்கிரண், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கெட்டப்பில் படு கெட்டப்பாக சூப்பர் வேடம் போட்டு திறமை காட்டி வருகிறார்.

தாரகரத்னாவுக்கு ஜோடியாக நடிப்பவர் சாம்னா. படு செட்டப்பாக இருக்கும் சாம்னாவுக்கு இது முதல் படம் என்றாலும் அவர் காட்டும் பந்தாவும், செய்யும் அலம்பல்களும், கால்ஷீட் சொதப்பல்களும் யூனிட்டை படு கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.

ஆரம்பத்தில் அமைதியாகத்தான் வந்து போனாராம் சாம்னா. அந்தக் கால கட்டத்திற்குள் மூன்று பாடல்களை எடுத்து முடித்து விட்டனர். மூன்று பாடல்களிலுமே கிளாமரில் படு தூக்கலாக நடித்துள்ளாராம் சாம்னா.

அதன் பிறகுதான் அவர் விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தாராம். ஷூட்டிங்குக்கு சரியாக வருவதில்லை, வந்தாலும் ஏனாதானோவென்று நடித்த டேக் மேல் டேக் வாங்குவது என சொதப்பி வருகிறாராம்.

இவர் வராததால் பலமுறை ஷூட்டிங் கேன்சலாகியுள்ளதாம். நிறைய செலவழித்து மூன்று பாடல்களை எடுத்தாகி விட்டது, சில காட்சிகளையும் ஷூட் செய்தாகி விட்டது. இந்த நிலையில் ஹீரோயினை மாற்றுவது உசிதமாக இருக்காது என தயாரிப்பாளர் தரப்பு கருதுவதால் பல்லைக் கடித்துக் கொண்டு சாம்னா போக்கில் போய் வேலை வாங்கி வருகிறார்களாம்.

இருந்தாலும் சாம்னாவின் சத்தாய்ப்பு எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதால் நடிகர் சங்கத்திடம் புகார் சொல்லி அவருக்கு ஆப்பு வைக்கலாமா என்று தயாரிப்பாளர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அழகுப் புள்ளை சாம்னா, இப்படி அமர்க்களம் பண்ணலாமாம்மா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil