மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்.. சம்பத்ராம் பகிர்ந்த “சிட்டிசன்“ நினைவு!

சென்னை : தல அஜித்துடன் நடித்த அனுபவங்களையும் ஷூட்டிங்கில் நடந்தவை பற்றியும் நடிகர் சம்பத்ராம் பகிர்ந்தார்.

Recommended Video

தல அஜித் குமார் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்

திரு அஜித் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்ல ஆரம்பித்த சம்பத்ராம் . இந்த போட்டோ பிரேம் திரு அஜித் குமார் அவர்கள் எனக்கு கொடுத்தது.எப்படின்னு கேடகுறீங்களா..? அது பற்றி ஒரு சின்ன பிளாஷ் பேக் நண்பர்களே... இயக்குனர்.நடிகர் சரவணன் சுப்பையா அவர்கள் இயக்கத்தில் திரு அஜித் அவர்கள் நடித்த "சிட்டிசன்"(நான் திரு அஜித் அவர்களுடன் நடிக்கும் மூன்றாவது படம்) திரைப்படத்தின் சூட்டிங் பழவேற்காடு கடல் மணல் திட்டில் நடந்த போது ,

Sampathram shared his experience with Ajith in the movie Citizen

ஒரு நாள் என்னை போன்ற கம்பெனி ஆர்டிஸ்ட் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட் அனைவரும் திரு அஜித் அவர்களிடம் "சார் நாங்கள் அனைவரும் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கனும் " என்றோம்.

உடனே அவர் கம்பெனி ஸ்டில் போட்டோகிராபரை அழைத்து அனைவருடனும் (36 பேர்) தனித்தனியே போட்டோ எடுத்துட்டு என்னை அழைத்து "சம்பத் இப்போ எடுக்கப்பட்ட எல்லோருடைய போட்டோ நெகட்டிவ்(அப்போவெல்லாம் பிளிம் நெகட்டிவ் வெச்சுதான் போட்டோ பிருன்ட் போடமுடியும்) எடுத்துட்டு என் மானேஜரிடம் பணம் வாங்கிட்டு போயி பிரிண்ட் போட்டு எடுத்துட்டு வந்து எல்லோரிடமும் குடுத்துடுங்க " என்றார்... நானும் " ஓகே சார் " என்றேன்.

அதன்படி நானும் சென்னை வந்து அப்பல்லோ லேபிற்கு சென்று கடைக்காரரிடம் நெகட்டிவை கொடுத்து " இந்த 36 நெகட்டிவையும் பிரிண்ட் போட்டு குடுங்க " என்றேன்.

Sampathram shared his experience with Ajith in the movie Citizen

அதற்கு அவர் "36 போட்டோவுக்கு பிரிண்ட் போட்டா ஒரு போட்டோவுக்கு பிரேம் போட்டு பிரீயா தருவோம்...எந்த போட்டோவுக்கு போட்டோ " என்றார்.உடனே நான் " என் போட்டோவுக்கு பிரேம் போடுங்கள் " என்றேன். அந்த போட்டோ பிரேம் தான் இது. இப்போ சொல்லுங்க...இது திரு அஜித் அவர்கள் கொடுத்தது தானே..?

Sampathram shared his experience with Ajith in the movie Citizen

இன்றைக்கும் என் வீட்டு மேஜையில் இருக்கும் ஒரே ஹீரோவோட போட்டோ இதுதான்.ஏனெனில் நான் அதிகபட்சமாக 11 படத்தில் திரு அஜித் அவர்களுடன் நடித்திருக்கிறேன். நன்றி அஜித் சார் " வாழ்க பல்லாண்டு என்று சொல்லி முடித்தார் சம்பத்ராம் .

Sampathram shared his experience with Ajith in the movie Citizen

இன்று அஜித் பிறந்த நாள் அன்று பல நடிகர்கள் பல அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சம்பத்ராம் பகிர்ந்த அனுபவங்களும் பொக்கிஷமானது. நெகடிவ் பிரிண்ட் போட்ட அனுபங்களை பலரும் பல விதத்தில் சொல்லியது உண்டு . போட்டோ நெகடிவ் மூலம் பாசிட்டிவ் சிந்தனைகள் கொடுத்த நடிகர் அஜித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X