மாறி, மாறி, மாறி ...
மளமளவென படங்கள் குவியாமல் சும்மா கிடந்த சந்தியா இப்போது படு ஒரே நேரத்தில் இரு படங்களில் ஓடி ஓடி நடிக்கும் அளவுக்கு பிசியாகி விட்டார்.
காதல் வந்த போது சந்தியாவுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக பெரிதாக கூறப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவரைத் தேடி பல படங்கள் வந்தபோதிலும் அதை ஏற்காமல் தாய் மொழியான மலையாளத்துக்குத் தாவினார் சந்தியா.அவரது நேரமோ என்னவோ மலையாளத்தில் அவர் நடித்த படம் போணியாகவில்லை. முகம் சுருங்கிப் போய் தமிழுக்குத் திரும்பியபோது அவருக்கு பட வாய்ப்பு வரவில்லை. இதனால் படு மந்தமாக இருந்தது சந்தியாவின் மார்க்கெட்.
வல்லவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் அது மேலும் மந்தமாகிப் போனது. வல்லவனில் சூப்பர் ரோல் என்று நம்பி நடித்து சில காட்சிகளிலேயே வருவது போல அதை சிம்பு சுருக்கி விட்டதால் கடுப்பாகிப் போனார் சந்தியா.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சந்தியா, ஏறிப் போன உடலைக் குறைத்துக் கொண்டு பட வாய்ப்புகளைத் தேடி கிளம்பினார். இதனால் மார்க்கெட் சூடு பிடித்து பல படங்களில் புக் ஆனார் சந்தியா.
இப்போது கை நிறையப் படங்களுடன் கலகலப்பாக இருக்கிறார் சந்தியா. பிரசன்னாவுடன் மஞ்சள் வெயில் படத்தில் நடிக்கும் சந்தியா அப்படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக் சென்றுள்ளார். பாடல் காட்சிகளை பாங்காக்கில் வைத்து சுட்டு வருகின்றனர்.
அதே பாங்காக்கில் சந்தியா நடிக்கும் இன்னொரு படமான தூண்டில் படத்தின் ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. இதில், ஷாம், சந்தியாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இரு படங்களின் ஷூட்டிங்கும் பாங்காக்கில் நடப்பதால் சந்தியா பாடு படு ஜாலியாகி விட்டது. காலையில் மஞ்சள் வெயில் ஷூட்டிங் என்றால் மாலையில் தூண்டிலுக்குப் போய் விடுகிறாராம்.
மாறி மாறி, ஓடி ஓடி இரு படங்களின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறாராம் சந்தியா. ஒரே நேரத்தில், ஒரே நாட்டில், இரு படங்களின் படப்பிடிப்பிலும் சந்தியா கலந்து கொள்வதற்கு இரு படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்களாம்.
இந்தப் படப்பிடிப்பை முடித்த பின்னர் செல்வராகவனின் இது மாலை நேரத்து மயக்கம் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளாராம் சந்தியா.
சந்தியா, சபாஷ்யா!


Click it and Unblock the Notifications











