பின்னி எடுக்கும் சந்தியா

By Staff

ஷங்கர் தயாரிக்க அவரது அசோசியேட் டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கி வரும் காதல் படத்தில் நடிக்கும் சந்தியா, இந்த முதல் படம்முடிவதற்கு முன்பே கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்.


கருப்பு நிறத்தில் இருந்தாலும் கலக்கலாய் இருக்கும் சந்தியா, அந்தப் படத்தில் காட்டி வரும் இளமைப் புயல் சில தயாரிப்பு பார்ட்டிகளைநிலை குலையச் செய்துள்ளதாம். அவரை தங்களது படங்களில் இழுத்துவிடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், காதல் படம் முடியும் வரை அடுத்த படத்தில் நடிக்கவோ, ஒப்பந்தம் போடவோ தடா போடப்பட்டுள்ளதால், இதோ வந்துட்டேன்,கொஞ்ச இருங்க என தன்னை நாடிய தயாரிப்பு நிறுவனங்களை காத்திருக்கும் லிஸ்டில் வைத்திருக்கிறார் சந்தியா.

கேரளத்தைச் சேர்ந்த இந்த சந்தியா பிளஸ் டூ படிப்பவர் மாதிரி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பது (!!) பரத். இவருக்கு பைக்மெக்கானிக் வேடமாம். பள்ளிக்குப் போய் வரும் வழியில் மெக்கானிக் ஷாப்பில் துருதுருவென இருக்கும் பரத்துக்கும் சந்தியாவுக்கும்காதல் முளைப்பது தான் கதையாம்.

படப்பிடிப்பு திண்டுக்கல், மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை, கேரளா, மூணாறுபகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் பாடல் காட்சிகள் இப்போது கேரளத்தில் படமாக்கப்பட்டுவருகின்றன.

அந்நியனில் மிகத் தீவிரமாக மூழ்கிவிட்ட ஷங்கர் இந்தப் படத்தின் சூட்டிங்போது எதிலுமே தலையிடவில்லையாம்.

தனது சீடர் மீது முழு நம்பிக்கை வைத்து கேட்கும்போது பணத்தை மட்டும் தட்டாமல் அள்ளித் தந்து வருகிறாராம்.

படத்தை ஒளிப்பதிவு செய்வது விஜய் மில்டன். செப்டம்பரில் ரிலீஸ் என்றார்கள், பின்னர் தீபாவளிக்கு என்றார்கள். இப்போது இன்னும் சிலநாட்கள் வாரங்களில் என்கிறார்கள்.

புதுமுகம் என்ற பயமே இல்லாமல் படத்தில் பரத்துக்கு லிப் கிஸ் தந்து அசத்தியிருக்கிறார். நெருக்கமான காட்சிகளிலும் சந்தியாபின்னிட்டாராம் பின்னி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X