சூட்டிங் ஸ்பாட்
கமல் நடித்து, இயக்கி வரும் சண்டியர் (முன்னாள் பெயர்) படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாய் தொடங்கிவிட்டது.
தேனியில் கிட்டத்தட்ட ரூ. 50 லட்சத்தில் செட் போட்டு படத்தை எடுக்க இருந்த நேரத்தில் புதிய தமிழகம் கட்சியின்தலைவர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பாலும் கடைசி நிமிடத்தில் போலீஸ் காலை வாரிவிட்டதாலும் படப்பிடிப்புரத்தானது.
இதன் பிறகு முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சி நடத்தி தலைப்பை மாற்றிவிடுவதாக உறுதி தந்தார் கமல்.இதையடுத்து கிருஷ்ணசாமியும் தனது எதிர்ப்பைக் கைவிட படப் பிடிப்பு தொடங்கியுள்ளது.
விருமாண்டி என்ற பெயருடன் வெளியாக இருக்கும் இப் படத்தின் சூட்டிங் தேனிக்குப் பதிலாக சென்னையிலேயேசெட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப் பிடிப்பு மிகரகசியமாக நடந்து வருகிறது.
More from Filmibeat
cancelled cinema gayathiri raghuram jayalalithaa kamal karhtik kiran kousalya lanka prabhakaran prabhu ramanan sandiyar tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











