»   »  மாயக்கள்ளி சஞ்சனா

மாயக்கள்ளி சஞ்சனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்தவுடனேயே பளாரென நெஞ்சுக்கள் ஏறி அமர்ந்து கொள்கிறார் சஞ்சனா. அப்படி ஒரு அசத்தல் அழகு பாப்பாவாக இருக்கிறார் இந்த மிஸ்.பெங்களூர்.

கலக்கல் தக்காளியாக இருக்கும் சஞ்சனாவை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்ததுக்காக இயக்குநர் ரவிஸ்ரீயை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படி ஒரு அட்டகாச அழகி சஞ்சனா.

மாயக்கள்வன் என்ற பெயரில் புதிதாக உருவாகும் படத்தில் சஞ்சனாதான் நாயகி. எதைச்சையாக ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் போய் விட்டோம். சஞ்சனா போட்டிருந்த காஸ்ட்யூம் நமது நெஞ்சாங்கூட்டை கீறி விட்டது.

வெறும் துண்டைத் தூக்கி நெஞ்சு வரை ஏறக் கட்டியிருந்தபடி தரிசனம் கொடுத்தார் சஞ்சனா. என்னங்க இது என்று அலறிப் போய் சஞ்சனாவிடம் பேசியபோது, தம்பீ, இதெல்லாம் சும்மானாச்சுக்கும், படம் பூரா இதை விட பத்து மடங்கு பாய்ச்சலுடன் பல்லாங்குழி ஆடியுள்ளேன். பார்த்து ரசிச்சுக்கோங்க என்று பல் வரிசை பளிச்சிட சிரித்தார் சஞ்சனா.

அம்மணிக்கு வெறுமனே நடிப்பதில் இஷ்டம் இல்லையாம். கிளாமர் ரோல் என்றால்தான் ரொம்ப விருப்பமாம். மாயக்கள்வன் படத்தில் புக் ஆனபோதே இயக்குநரிடம் இதை தெளிவாக சொல்லி விட்டாராம்.

இதனால் சஞ்சனாவுக்கென்று காஸ்ட்யூம் செலவுக்காக கஷ்டப்படவில்லையாம் மாயக்கள்வன் பட யூனிட்டார். துண்டு தவிர வாழை மரத்துக்குப் பக்கம் வைத்தும் சில ஷாட்களை சுட்டுள்ளனர். இலைதான் சஞ்சுவை மூடப் பயன்பட்ட ஆடையாம்.

சஞ்சனா சாதாரணப் பொண்ணு இல்லை. மிஸ். பெங்களூர் பட்டம் வென்ற பஞ்சுப் பொண்ணு. பார்த்தவுடனேயே பத்திக்க வைக்கும் அழகுடன் ரசிகர்களின் நெஞ்சைக் குறி வைத்து கோலிவிட்டில் குதித்துள்ளார்.

ஹீரோ சச்சினும், சஞ்சனாவும் கடற்கரையில் இணைந்து கொடுத்துள்ள சில ஷாட்களைப் பார்த்தால் நரம்பெல்லாம் ஜில்லிட்டுப் போகும். அப்படி ஒரு கிளாமர் சஞ்சனாவிடம். மாராப்புன்னா கிலோ என்ன விலை என்று கேட்பார் போல. படம் பூராவும் சச்சினோடு நல்லா உருண்டு புரண்டிருக்கிறார்.

படத்தில் இன்னொரு முக்கியமான மேட்டர் கிஸ்ஸிங் காட்சிகள். படம் பூராவும் சஞ்சனாவின் அமர்க்களமான முத்தக் காட்சிகள் விரகவிக் கிடக்கிறதாம். வாய் வலிக்க, உதடு துடிக்க, உணர்ச்சிப் பெருக்கோடு சச்சினும், சஞ்சனாவும் கிஸ் மழை பொழிந்திருக்கிறார்களாம். இந்தப் படத்துக்குப் பிறகு மிஸ். பெங்களூர் என்பது மாறிப் போய் கிஸ். பெங்களூர் என்று சஞ்சனாவைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள்.

ஹீரோவாக நடிக்கும் சச்சின் மாடலிங் பாய். ஆனால் பார்ப்பதற்கு பிளே பாய் போல படு மஜாவாக இருக்கிறார். அவரும், சஞ்சனாவும் ஷூட்டிங் வந்த நாள் முதலே படு ஜாலியாக பழக ஆரம்பித்து விட்டடார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil