டூப் வேணாம்... சந்தானம் எடுத்த ரிஸ்க்!
இனி ஹீரோதான்... அதுவும் ஆக்ஷன், ரொமான்டிக் ஹீரோதான் என்பதில் எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் பயணத்தைத் தொடர்கிறார் சந்தானம்.
இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஆக்ஷன் ரொமான்டிக் படம் ஓடி ஓடி உழைக்கணும். நாயகி அமைரா தஸ்தூர். இந்தப் படத்தில் பிரதான காமெடியன் யார் தெரியுமா... யோகி பாபு.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிக்க, கேஎஸ் மணிகண்டன் இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்திற்காக சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். வில்லனாக நடிக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான காட்சி படமாக்கப்பட்டது.
டூப் இல்லாமல் மேல் இருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் சந்தானம் ஸ்டன்ட் காட்சியில் நடித்து யூனிட் ஆட்களின் கைத் தட்டலை பெற்றிருக்கிறார். சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, ஸ்டன்ட் சமாச்சாரங்களை முறைப்படி கற்றுமிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











