மலேசிய ஷூட்டிங்கில் சரத்குமார் காயம்

நடிகர் சரத்குமார்-ஜெயசுதா ஜோடியாக நடிக்கும் படம் 1977. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 1 மாதமாக மலேசியாவில் நடந்து வருகிறது. இதற்காக சரத் மலேசியாவில் முகாமிட்டுள்ளார்.
ஒரு சண்டைக் காட்சியை ஓரிரு நாட்களுக்கு முன்பு படமாக்கினர். அப்போது டூப் வைத்துக் கொள்ளலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் வில்லியம் கூறினார். ஆனால் அதை மறுத்த சரத் தானே செய்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சரத் நடிக்க அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வில்லன் வீசிய உருட்டுக் கம்பு வேகமாக சரத் காலில் பாய்ந்து தாக்கியது. இதனால் வலியால் துடித்தார் சரத், காலிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறியதால், அவர் சம்பந்தப்படாத காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர்.
சரத்குமார் காயமுற்ற தகவலை அறிந்ததும், அவரது மனைவி ராதிகா உடனடியாக மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.


Click it and Unblock the Notifications











