சூட்டிங் ஸ்பாட்
நடிகை சிம்ரசினிமா படப்பிடிப்பின்போது நடிகர் சரத்குமாரின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சரத்குமார் நடித்து வரும் "சமஸ்தானம்" படத்தின் ஷூட்டிங் சென்னை அருகே உள்ள தண்டலம் என்ற கிராமத்தில்
நடந்தது.வில்லன் ஆட்கள் சரத்குமாரை அடிப்பது போல அதில் ஒரு காட்சி வந்தது.
அப்போது ஸ்டண்ட் நடிகர் ஒருவர் சரத்குமாரை தாக்குவது போன்ற காட்சியில் நிஜமாகவே சரத்குமாருக்கு கையில்அடிபட்டது. இதனால் அவருடைய கையில் பெரிய வீக்கம் ஏற்பட்டது.
உடனடியாக ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டு சரத்குமார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications