சூட்டிங் ஸ்பாட்
சண்டைக்காட்சியில் நடித்த போது, நெற்றியில் இரும்புக் கம்பி குத்தி நடிகர் சரத்குமார் பலத்த காயமடைந்தார்.
சரத்குமார் இப்போது ஏய் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சரத்குமாருக்கு ஜோடி எங்கள் அண்ணாபடத்தின் கதாநாயகி நமிதா.
இந்த படத்தின் சண்டைக்காட்சி, சென்னை அண்ணா சாலையில் ஒரு பழைய கட்டிடத்தில் படமாக்கப் பட்டது.வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை சரத்குமார் துரத்திக் கொண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமாரின் நெற்றியில் 50 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பி குத்தியது.இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது.
விபத்தையடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. படுகாயம் அடைந்த சரத்குமார் அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நரம்பியல் டாக்டர்கள் ரெஜினால்டு, பாஸ்கர் ஆகியஇருவரும் சரத்குமாருக்கு சிகிச்சை அளித்தனர். அவருடைய நெற்றியில் ஸ்கேன் - எக்ஸ்ரே எடுக்கப்பட் டது.
ஏய் படத்தின் இயக்குநர் வெங்கடேஷ், இயக்குநர் வி.சேகர், நடிகர் பார்த்திபன், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர்சுப்பராயன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சரத்குமாரை பார்த்தார்கள்.
சிகிச்சைக்குப்பின் சரத்குமார் வீடு திரும்பினார். இரண்டு நாட்கள் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்றுடாக்டர்கள் கூறியுள்ளதால் இப்போது வீட்டிலேயே அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











