ஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்

சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து வரும் டெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடித்தது பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட சாயிஷா, உயரம் ஒரு மனிதனை உயர வைக்காது, அவனுடைய செயல்கள் தான் அதை உறுதிசெய்யும், என்று தனது கணவர் ஆர்யாவை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார்.

கஜினிகாந்த் திரைப்படத்திற்கு பிறகு ரியல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் மறுபடியும் திரையில் ஜோடியாக நம் மனங்களை கவரப் போகும் திரைப்படம் டெடி.

Sayyeshaa tweet about Arya

மிருதன், டிக் டிக் டிக் ஆகிய திரைப்படங்கள் மூலம் ஜெயம் ரவியை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்பொழுது ஆர்யா, சாயிஷா ஜோடியை டெடி திரைப்படம் மூலம் இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.

படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் கதாநாயகி சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உயரம் ஒரு மனிதனை உயர வைக்காது, அவனுடைய செயல்கள் தான் அதை உறுதிசெய்யும், என்று தனது கணவர் ஆர்யாவை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார்.

ஒரு அற்புதமான நடிகருடனும் அற்புதமான இயக்குநருடனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது எனக்கு மிக சுவாரசியமாய் இருந்தது. மிக விரைவில் நீங்கள் அனைவரும் இந்த படத்தை திரையில் காணலாம் என்றும் தெரிவித்திருந்தார் நடிகை சாயிஷா.

மேலும் இப்படத்தை பற்றி இயக்குநர் சக்தி சௌந்தராஜன் கூறுகையில், இது குழந்தைகளையும், குடும்பங்களையும் பெரிதும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்க வந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்துவிடும் என்று ஆர்யாவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் இடையில் இருந்த நடிகர் நடிகை என்ற உறவானது முடிவுக்கு வரவிருக்கிறது. இதற்கு பின்பு இருவரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X