தனுஷ் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.. ஒருவர் கவலைக்கிடம்!
தனுஷின் மாப்பிள்ளை படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நேற்று நடந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஜினி நடித்து வெற்றி பெற்ற மாப்பிள்ளை படத்தை தனுஷ் ரீமேக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகாவும் மாமியாராக மனீஷா கொய்ராலாவும் நடிக்கிறார்கள்.
மாப்பிள்ளை படப்பிடிப்பு திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றோரப் பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் 30-ம் தேதி, இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் மதன்பாப் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் இருவரும் காயமடைந்தனர்.
அடுத்தடுத்த இரு விபத்துக்களால் மாப்பிள்ளை யூனிட் பெரும் கவலையில் மூழ்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











