»   »  டாப்லெஸ் விளையாட்டு!

டாப்லெஸ் விளையாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் அரங்கம் படத்தில் டாப்லெஸ்ஸாக நடித்த ஷெர்லியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு படு பாங்காக டாப்லெஸ் காட்சிகளில் நடித்துள்ளாராம் விளையாட்டு படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள சீமா.

தமிழ் சினிமாவில் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் முமைத் கானுக்கு சரியான போட்டியாக இருக்கிறார் சீமா. முமைத் கானை விட பிரமாண்ட அழகு, பிரமாத கிளாமர் என தூள் கிளப்பும் சீமா, விளையாட்டு படத்திற்காக ஒரு குத்துப் பாட்டுக்கு விளையாடியுள்ளார்.

சீமா குத்துப் பாட்டுக்கு வருவதற்கு முன்பு குரூப் பாட்டுக்களில் குதூகலமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது திறமையை புரிந்து கொண்ட சிலர் குத்துப் பாட்டுக்கு ஆடினால் குபீர் என குபேரி ஆகி விடுவாய் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் கூறவே, உடனே ஒத்துக் கொண்டு முயற்சிக்க, வந்து சிக்கிய வாய்ப்புதான் விளையாட்டு.

சீமாவின் திறமைக்கு சரியான தீனி கொடுப்பதாக உறுதி கூறி அவரை குத்துப் பாட்டுக்கு புரமோஷன் செய்த பெருமை விளையாட்டு பட இயக்குநர் எழில் வேந்தனையே சாரும்.

இப்படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியது போக இரு சீன்களில் மேலாடை நீக்கி தோலாடையுடன் கிக் ஏற்றியுள்ளாராம் சீமா. விளையாட்டு படத்தில் வில்லனாக நடிப்பவர் ஆங்கிலேயரான ஆண்ட்ரூ. காட்சிப்படி ஆண்ட்ரூவை மயக்கி தனது பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் சீமா.

அவரை தனது கஸ்டடிக்குக் கொண்டு வருவதற்காக, காதல் மொழி பேசி ஆண்ட்ரூவைக் கவரும் சீமா, அப்படியே தனது மேலாடையை நீக்கி அவரை அசரடிக்கிறார். பிரமித்துப் போகும் ஆண்ட்ரூ, அப்படியே சரண்டர் ஆகிறாராம்.

இதேபோல இன்னொரு காட்சியில் சீமாவைப் பழி வாங்க நினைக்கும் ஆண்ட்ரூ, பொது இடத்தில் வைத்து சீமாவின் ஜாக்கெட்டை கிழித்து அவமானப்படுத்துகிறாராம். இந்த இரு காட்சிகளையும் சீமாவிடம் விளக்கிய இயக்குநர் எழில்வேந்தன், இரு காட்சிகளும் ரொம்ப முக்கியமானவை, படத்துக்கு இவை முக்கியத் திருப்பமான காட்சிகள். எனவே இதில் நடிக்க வேண்டும் என்றாராம்.

இதைக் கேட்டதும் புல்லரித்துப் போன சீமா, கண்டிப்பாக நடிக்கிறேன், இதற்காக எனக்கு நீங்கள் எக்ஸ்ட்ரா காசு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி எழிலை நெகிழ வைத்துள்ளார் (இன்னா ஒரு கலைத்தாகம் நைனா!)

இப்படத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. கண்ணன் தயாரிக்கிறார். காதல் படத்தின் நாயகி சந்தியாவின் தோழியாக வந்த சரண்யாதான் இதில் நாயகி. பாண்டியராஜனும் படத்தில் வருகிறாராம்.

படத்தின் நாயகன் யாருன்னு கேட்கலியே, சாட்சாத் எழில்வேந்தனேதான் ஹீரோவும் கூட!

இப்பவே பரபரக்குதே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil