இடிமுழக்கம் படப்பிடிப்பு முடிந்தது... நன்றி சொன்ன ஜி வி பிரகாஷ் குமார்!

சென்னை : ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது இடிமுழக்கம் திரைப்படம்.

கிராமத்து கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நர்ஸாக நடித்துள்ளார்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு ஜி வி பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கிராமத்து கதை களத்தில்

கிராமத்து கதை களத்தில்

தனது இசையின் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட ஜிவி பிரகாஷ்குமார் இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உயர்ந்துள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து வருகிறது. இயக்குனர் பாரதிராஜாவின் படங்களைப் போலவே கிராமத்து கதை களத்தில் படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.

காயத்ரி நர்ஸாக

காயத்ரி நர்ஸாக

இந்த படத்திற்கு இடிமுழக்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இப்படத்தில் பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். அவருக்கு நர்ஸ் கதாபாத்திரம் என கூறப்படுகிறது . விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள மாமனிதன் படத்திலும் காயத்ரி கதாநாயகியாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது

படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது "இடி முழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஜிவி பிரகாஷின் நன்றி பதிவுக்கு சீனுராமசாமி ரீ-ட்வீட் செய்துள்ளார்.

வெற்றித்தமிழன்

வெற்றித்தமிழன்

ஆணவம் இல்லாத அறிவு தாய்மொழிப் பற்று தன்னை ஒப்புவித்து ஒத்துழைத்த கலை எளிமை இசையோடு கூடிய தமிழறிவு என் கலை மீதான அன்பு இவையெல்லாம் உங்கள் பக்கம் எனை ஈர்த்தது "வெற்றித்தமிழன்" என்றே உங்களை அழைக்க விழைகிறேன் துணை வரட்டும் என் தாய் மீனாட்சி வாழ்த்துகள் தம்பி ஜிவி பிரகாஷ். என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X