கைவிடப்பட்ட செல்வராகவன்-ராணா படம்!

By Chakra

Rana
செல்வராகவன்- தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி இணையவிருந்த சரித்திரப் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடிக்க தமிழ்- தெலுங்கில் இருமொழிப் படம் ஒன்றை உருவாகவிருந்தார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் இருவரும் கூட்டாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர்.

ஆனால் இந்தப் படத்தின் கதையமைப்பில் இருவருக்குமிடையே பெரும் விவாதம் எழுந்ததாகவும், அதில் எழுந்த கசப்பு காரணமாக படத்தைக் கைவிட முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

செல்வராகவன் ஸ்க்ரிப்ட்படி இந்தக் கதை கிமு 50ம் ஆண்டில் நடப்பது போல வருகிறதாம். ஆனால், இன்னும் நவீன கால வரலாற்று கதை வேண்டும் என்று ராணா பிடிவாதம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் படம் கைவிடப்பட்டது குறித்து தயாரிப்பாளரும் ராணாவின் தந்தையுமான சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதே நேரம், வேறொரு தமிழ்- தெலுங்கு இருமொழிப் படத்தில் நடிக்க அவசர அவசரமாக ஒப்பந்தமாகியுள்ளார் ராணா.

இந்தப் படத்தை இயக்குபவர் கெளதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கை தள்ளிவைத்துவிட்டு, இந்த புதியபடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அவர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ராணாவுக்கு ஜோடி சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்தவர்.

இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட்டிங் திங்கள்கிழமை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. படப்பிடிப்பு இன்னும் இரு வாரங்களில் தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X