»   »  மலையில் மயங்கிய ஷீலா!Vs

மலையில் மயங்கிய ஷீலா!Vs

Subscribe to Oneindia Tamil

ஆபத்தான மலைப் பகுதியில் ஷூட்டிங் நடந்ததால், பயத்தில் அலறி மயக்கம் போட்டு விட்டாராம் ஷீலா. ஒரு வழியாக தைரியத்தைக் கொடுத்துஷூட்டிங்கை முடித்து கீழே இறங்கியுள்ளது சீனாதானா 001 பட யூனிட்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தைத்தான் சீனாதானா 001 என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். டி.பி.கஜேந்திரன்தான்இயக்குநர்.

பிரசன்னாவும், ஷீலாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்துக்காக யுகபாரதி எழுதிய உன்னைப் பார்த்த முதல் நாளே என்னை நானும்மறந்தேனே என்ற அருமையான டூயட் பாட்டை படமாக்க கேரளாவுக்குக் கிளம்பினர்.

கேரளாவில் உள்ள நெல்லையம்பதி என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தினர். நெல்லையம்பதி ஒரு வித்தியாசமான ஏரியா. அதாவது,செங்குத்தான மலைகள் நிரம்பிய பகுதி அது. மேலே போவதே பெரிய சவாலான விஷயம்.

மிகவும் குறுகலான மலைப் பாதை, மிகவும் ஜாக்கிரதையாக போக வேண்டும். கரணம் தப்பினால் கணுக்கால் எலும்பு கூட மிஞ்சாதாம். இதுதெரியாமல் டி.பி.கஜேந்திரன் அண்ட் கோ மலைக்குப் போய் விட்டதாம்.

போகப் போகத்தான் நெல்லையம்பதியின் பயங்கர பின்னணி தெரிய வந்துள்ளது. யூனிட்டில் உள்ளவர்கள் பாதிப் பருக்கு வயிறு கலங்கிப் போய்விட்டதாம். அப்படியே திரும்புவோமா என்ற பயம் பலருக்கு.

யூனிட்டைச் சேர்ந்த ஜீப்புகள் கஷ்டப்பட்டு மலையில் ஏறியுள்ளன. அதில் இருந்தவர்களோ இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டுஅமர்ந்திருந்தனராம்.

அழகு தேவதை ஷீலாவோ பயத்தில் வாய் விட்டு அலறியே விட்டாராம். பயம் அதிகமாகி மயக்கமும் வந்து விட்டதாம். அவரை ஒரு வழியாகசமாதானப்படுத்தி மேலே கூட்டிக் கொண்டு போய் டூயட்டை எடுத்துள்ளனர்.

படு ரொமான்ஸாக எடுக்க வேண்டிய பாடல் காட்சி அது. ஆனால் பயத்தில் ஷீலா இருந்ததால், வழக்கத்தை விட பாதி ரொமான்ஸ் மூடைத்தான்காட்டி ஆடினாராம் ஷீலா.

கூட ஆடிய குரூப் டான்ஸ் நங்கைகளும் எப்போடா தரையிறங்குவோம் என்று பயந்தபடியேதான் ஆட்டம் போட்டார்களாம். ஒரு வழியாகபடப்பிடிப்பை நடித்தி முடித்து விட்டு பத்திரமாக தரையிறங்கினார்களாம்.

அரண்டு போய் இருந்த ஷீலா, தரைக்கு வந்த பிறகு பெரு மூச்சு விட்டு பயத்தை வெளியேற்றினாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil