»   »  வெக்கையைக் கிளப்பிய வேதா

வெக்கையைக் கிளப்பிய வேதா

Subscribe to Oneindia Tamil

இளவட்டம் நாயகி ஷீலா, அருண்குமார் நடிப்பில் உருவாகவுள்ள வேதா படம் புதியசர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

அருண்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கும் படம்தான் வேதா.இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஷீலா.

சின்னப் புள்ளையாக சில படங்களில் நடித்துள்ள ஷீலா, முதல் முறையாக ஹீரோயின்அவதாரம் பூண்ட படம் இளவட்டம். இதில், ஷீலாவின் கவர்ச்சி மழையால்,கன்னபின்னாவென இதயம் துடித்த ரசிகர்கள், ஷீலாவின் பரம விசிறிகள் ஆகிவிட்டனர்.

இளவட்டப் பசஙங்களுக்கு மத்தியில் தனக்காக ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள ஷீலாவுக்கு இந்தப் படத்திலும் கிளாமர் கலந்த கிங்கணக்காவேடம்தானாம். பின்னி எடுத்து பெடல் தொடுக்க ஆயத்தமாக உள்ளார் ஷீலாவும்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஒரு முக்கியமான இடத்தில் நடந்தது. எங்குதெரியுமா?. சென்னை ஆளுனர் மாளிகைக்கு உள்ளே. ஆளுனர் பர்னாலாதான் படபூஜையின் நாயகர்.

இதுதான் இப்போது வெக்கையைக் கிளப்பி விட்டு விட்டது. குடியரசுத் தலைவர்,பிரதமர், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட மிக மிக க்கியமான விஐபிக்கள்தங்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் சினிமா படப்பிடிப்பை நடத்தலாமா? என்றுசர்ச்சை கிளம்பியுள்ளது.

மிக மிக பாதுகாப்பான ஒரு இடத்திற்குள் பட பூஜையை நடத்தியது எப்படி? சிலகாட்சிகளையும் அந்த சமயத்தில் படமாக்கியதாக கூறப்படுவதால் அதற்கு எப்படிஅனுமதி அளிக்கலாம்? என கேள்வி மேல் கேள்வி எழுந்துள்ளது.

இதில் இன்னொரு மேட்டரும் இருக்கிறதாம். ஆளுநர் பர்னாலாவின் தூரத்துஉறவினரான சரப்ஜித் சிங் என்பவரின் மகன் ஜெரோவதன் இப்படத்தில இரண்டாவதுஹீராவாக நடிக்கிறாராம். அதனால்தான் விதிமுறைகளை மீறி படக் குழுவினரைஉள்ளே அனுமதித்திருக்கிறார்கள் என்கிறார்கள்,

இப்பிடி கூட பிரச்சனை வருமா?

ஏம்பா சொல்லவே இல்லே..

Read more about: vedha film in new trouble
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil