»   »  ஷெரீன் காபி ஷாப்!

ஷெரீன் காபி ஷாப்!

Subscribe to Oneindia Tamil

துள்ளல் அழகி ஷெரீன் மீண்டும் வருகிறார் தமிழுக்கு, காபி ஷாப் மூலமாக.

தமிழ் சினிமாவில் காபி ஷாப் என்றாலே அதற்கு வேறு அர்த்தம். அந்தப் பெயரிலேயே இப்போது ஜில்லுன்னு ஒரு படத்தைத் தயாரிக்கப்போகிறார்கள். ஓரிரு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள ரவிச்சந்திரன்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

அவர் இயக்கத்தில் பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள் சூப்பர் ஹிட் படமானது. பெரிய இடைவெளிக்குப்பின்னர் இப்போது மீண்டும் இயக்க வருகிறார் ரவிச்சந்திரன்.

காபி ஷாப் என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளார் ரவிச்சந்திரன். இதில் ஹீரோவாக நடிப்பவர் நந்தா. புன்னகைப் பூவே மூலம் நடிக்க வந்த நந்தா,பின்னர் மெளனம் பேசியதே படத்தில் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தார். சமீபத்தில் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக அரட்டிக்கொண்டிருக்கும் அகரம் படத்திலும் அசத்தியுள்ளார்.

நந்தாவுக்கு ஜோடி போடப் போகிறவர் ஷெரீன். தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் விளம்பரப் படங்களில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் ஷெரீனை காபி ஷாப் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார் ரவிச்சந்திரன்.

விளம்பரங்களில் பிசியாக இருந்து வந்த ஷெரீனுக்கு மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்பு வந்தது சந்தோஷமாகி விட்டதாம். தனக்கு அழகு, திறமைஎல்லாம் இருந்தும் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்று நெருங்கியவர்களிடம் புலம்பி வருவாராம் ஷெரீன்.

இப்போது அவரைத் தேடி புதிய பட வாய்ப்பு வந்ததால், அப்பாடா இப்போதாவது புரிஞ்சுக்கிட்டாங்களே என்று சந்தோஷ பெருமூச்சுவிட்டுள்ளாராம்.

விவேக்குக்கு படத்தில் படு வித்தியாசமான கேரக்டராம். மனிதர் தனது கேரக்டர் குறித்து ரவிச்சந்திரன் சொன்னவுடேனேயே நிச்சயமா நான் இதைச்செய்கிறேன் என்று கூறி விட்டாராம் விவேக்.

படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். கண்டிப்பாக தமிழில் மாற்றி விடுவார்களாம்.

அதுக்காக கொட்டை வடிநீர் குழாம் என்று மாற்றீடாதீங்க!

Read more about: sherin in coffee shop
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil