தாராளமய ஷிவானி!

By Staff

காதல் எப்.எம்.மில் கிளாமர் கதகளி ஆடிய ஷிவானி சிங், இப்போது நண்பனின் காதலியில், கவர்ச்சி அதகளம் பண்ணியிருக்கிறாராம்.

பாய்ஸ் பட நாயகர்களில் ஒருவரான மணிகண்டன் தனி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து ஆட்டம் போட்டவர்தான் ஷிவானி சிங்.பச்சையாக எடுக்கப்பட்ட அந்தப் படத்தை பார்க்க, மகா ஜொள்ளர்கள் கூட தயங்கவே, படம் படுத்து விட்டது.

இதையடுத்து மணிகண்டனை ஆளையே காணோம். ஷிவானி சிங்கும் மாயமானார். இந்த நிலையில் பெ>ய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும்வருகிறார் ஷிவானி சிங்.

நண்பனின் காதலி என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் ஷிவானிக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் காணாமல் போன குணால், இன்னொருவர்வினுசக்ரவர்த்தியை ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்த விக்ரமாதித்யா. இவர் விசில் படத்தில் நாயகனாக நடித்தவர்.

காதல் எப்.எம்.மில் பார்த்ததை விட படு பளிச் என ரம்யமாக மாறியிருக்கிறார் ஷிவானி சிங். படம் முழுக்க கிளாமரில் துள்ளி ஆடியிருக்கிறாராம்.

படத்தின் இயக்குநர் கிச்சாவிடம் படத்தோட கதையைக் கேட்டால், அதை விடுங்க, ஷிவானியைப் பார்த்தீங்களா என்று ஷிவானி புராணம் பாடஆரம்பித்தார்.

ஷிவானிகிட்ட அழகு, நடிப்பு, திறமை எல்லாமே இருக்கு பாஸ், ஆனால் இதுவரை அவற்றை சரியாக வெளிப்படுத்தும் வகையில் நல்ல படம்அமையவில்லை. அதனால்தான் அவர் எடுபடாமல் போய் விட்டார். (இல்லாட்டாலும்!)

இந்தப் படத்தில் அவருக்கு அருமையான கேரக்டரைக் கொடுத்துள்ளேன். நடிப்பு, கிளாமரில் பிய்த்து வாங்கியுள்ளார். கிளாமர் சற்றே கூடுதல்தான்.இருந்தாலும் முகம் சுளிக்க வைக்காது. ரசிக்க வைக்கும்.

நண்பனின் காதலி, ஒரு காமடி கலந்த ரொமான்ஸ் படம். வில்லங்கமும் இருக்கும், விசேஷமும் இருக்கும். ஷிவானியை குணாலும், விக்ரமாதித்யாவும்துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்கள்.

யாருக்கு வெற்றி என்பதையும், இருவரிடமும் சிக்கி ஷிவானி படும் பாட்டையும் படு காமெடியாக, கிளாமராக, கவிதையாக, அழகாககொடுத்திருக்கிறோம்.

படம் முழுக்க கோவாவில்தான் ஷூட் செய்துள்ளோம். சென்னையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. தமிழ் தவிர தெலுங்கிலும் டப் செய்யவுள்ளோம்என்று அடுக்கினார் கிச்சா.

நல்லா ரிச்சா காட்டுங்க ஷிவானியை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X