தாமதமான படங்களின் ஷூட்டிங்... நடிகர் சூர்யா எடுத்த வேற லெவல் முடிவு!

துபாய் : நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படம் சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

வரும் பிப்ரவரி மாதத்தில் அவரின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் பாலா உள்ளிட்டவர்கள் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படங்களின் ஷூட்டிங் தாமதமானதை அடுத்து அவர் தற்போது தன்னுடைய விடுமுறையை பிளான் செய்துள்ளார்.

 நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் அவருக்கு நல்ல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த படம் ஐஎம்டிபி வலைதளத்தில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து சூர்யாவின் கைவசம் நான்கைந்து படங்கள் உள்ள நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ஷனில் அவர் நடித்து முடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பாலாவின் இயக்கத்தில் சூர்யா கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க உள்ளது.

வாடிவாசல் படம்

வாடிவாசல் படம்

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. வெற்றிமாறன் தற்போது சூரி,விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டே வெற்றிமாறன் வாடிவாசல் சூட்டிங்கில் இணைவார் என்று தெரியவந்துள்ளது.

 சிவா இயக்கத்தில் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா

அடுத்ததாக, இயக்குனர் சிவா டைரக்ஷனிலும் சூர்யா நடிக்க உள்ளார். தற்போது அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள சிவா சூர்யாவுக்காக அடுத்த படத்தை தயார் செய்வதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

பாலா இயக்கத்தில் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா


இதையடுத்து பாலா டைரக்ஷனில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கே முதலில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் தற்போது கதையை தயார் செய்ய சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார் பாலா.

சூர்யா விடுமுறை கொண்டாட்டம்

சூர்யா விடுமுறை கொண்டாட்டம்

இதையடுத்து தற்போது ஓய்வாக உள்ள நடிகர் சூர்யா தன்னுடைய இந்த நாட்களை செலவழிக்க துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் இந்த விடுமுறையை சிறப்பாக கழிக்க திட்டமிட்டு உள்ளார். விரைவில் இந்தியா திரும்பும் சூர்யா தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: surya suryasivakumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X