For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரவுகிறது கொரோனா வைரஸ்... நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் திடீர் கேன்சல்!

    By
    |

    கொச்சி: மஞ்சு வாரியர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் திடீரென கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

    Akhil injured in Shooting Spot | Most Eligible Bachelor | Dilip | Manju Warrior

    மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

    மோகன்லாலின் பிரமாண்ட படம்.. 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' ரிலீஸ் தள்ளி வைப்பு.. இதுதான் காரணம்!

    ஜோதிகா நடிப்பில்

    ஜோதிகா நடிப்பில்

    15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை அசுரன் மூலம் நிறைவேறியது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

    மம்மூட்டி ஜோடியாக

    மம்மூட்டி ஜோடியாக

    இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. ' அவருடன் நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு. இப்போது நனவாகி உள்ளது' என்றும் மஞ்சு கூறியிருந்தார். அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் கிரைம் திரில்லர் படமான இதை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன், வி.என்.பாபு தயாரிக்கின்றனர்.

    கொச்சியில் ஷூட்டிங்

    கொச்சியில் ஷூட்டிங்

    இதன் ஷூட்டிங் கேரளாவில் தொடங்கியபோது, நடிகர் மம்மூட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மஞ்சுவாரியர், அதை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், கனவு நனவாகிறது. நன்றி மம்மூக்கா என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதன் ஷூட்டிங் கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வேகமாக நடந்து வந்தது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கு வரும் 31 ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் சில படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகளையும் தள்ளி வைத்துள்ளனர். மம்மூட்டி, மஞ்சுவாரியர் நடிக்கும் த பிரீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கையும் தள்ளி வைத்துள்ளனர்.

    ரிலீஸ் தேதி

    ரிலீஸ் தேதி

    கொரோனா கட்டுக்குள் வந்த பிறகே இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை மே மாதம் ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர். படப்பிடிப்பு கேன்சல் காரணமாக, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

    English summary
    The shooting of Mammootty-starrer The Priest has been called off due to the coronavirus scare.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X