»   »  ஷ்ரேயாவை கொள்ளையடித்த தமிழ்

ஷ்ரேயாவை கொள்ளையடித்த தமிழ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜியில் ரஜினியுடனும் தனுசுடன் திருவிளையாடலிலும் ஆட்டம் போட்டு வரும் ஷ்ரேயாவக்கு திடீரெனதமிழ் மீது பற்று வந்துவிட்டது. இதனால் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ஷ்ரேயா சரண், இது தான் ஷிரேயாவின் ஒரிஜினல் பெயர். மும்பையைச் சேர்ந்த மாடல்-டர்ன்ட்-நடிகைஇப்போது தமிழிலும் தெலுங்கிலும் படு பிஸி.

இப்போது தமிழ் வசனங்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வைத்துக் கொண்டு தான் கேமராவுக்கு முன்வாயை அசைத்து வருகிறார்.

டப்பிங்கில் இவருக்கு பதிலாக யாராவது வாய்ஸ் கொடுத்து, ஷ்ரேயா கேரக்டருக்கு உயிர் தந்து வருகிறார்கள்.தெலுங்கிலும் இதே கதை தான்.

இதனால் அப்படியே பிழைப்பை ஓட்டி விடலாம் என நினைத்த ஷ்ரேயாவுக்கு ஷங்கர் ரூபத்தில் ஆப்பு வந்தது.எந்த விஷயத்திலும் அதீத பெர்பக்ஷன் எதிர்பார்க்கும் ஷங்கர் ஷ்ரேயாவின் டயலாக் டெலிவரியின்போது வாய்ஒரு பக்கமும் பேச வேண்டிய வசனம் ஒரு பக்கமும் போவதைப் பார்த்து எரிச்சலாகி அவ்வப்போது கடிந்துகொண்டாராம்.

தனது அசோசியேட்களை விட்டு ஷ்ரேயாவின் டயலாக் டெலிவரியை நேர் செய்தாராம். இதனால் ரொம்பவேசிரமப்பட்டுவிட்டாராம் ஷ்ரேயா.

ஒரு வழியாக ஷங்கரை சமாளித்துவிட்டு கரையேறிய ஷ்ரேயாவுக்கு திருவிளையாடல் ஆரம்பம் படத்திலும்அதே டயலாக் சிக்கல். டைரக்டர் பூபதி பாண்டியனே களமிறங்கி ஷ்ரேயாவுக்கு உதவி, சரியாக பேசவைத்துவிடுகிறாராம்.

இப்படியாக டைரக்டர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழ் பேச வைக்கப்பட்ட ஷ்ரேயாவுக்கு தமிழ் மீதுஇப்போது ஒரு தனி பற்றே வந்துவிட்டதாம். மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகளை சொல்லி வந்தவர் தமிழ்வார்த்தைகளை சொல்லவே மிக அற்புதமாக இருப்பதாக கூறுகிறார். இதனால் தமிழ் கற்றுக் கொள்ளவும்ஆரம்பித்திருக்கிறார்.

இது மிக அட்டகாசமான மொழி, பேசவே இனிக்கிறது. மனசெல்லாம் நிறைந்துவிடுகிறது. இதனால் தமிழைகற்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளேம். நானே எனக்கு டப்பிங் குரல் கொடுக்கும் அளவுக்கு விரைவில் என்தமிழை தீட்டப் போகிறேன் என்கிறார்.

காசை அள்ளித் தமிழ் சினிமாவுக்காக தமிழ் கற்றாலும், ஷ்ரேயாவின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

Read more about: shreya learns tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil