»   »  த்ரிஷ்ரியாவின் முரண்டு

த்ரிஷ்ரியாவின் முரண்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வர்ஷம் படத்தில் மழை சீன்களில் சீன் காட்டிய த்ரிஷாவை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

த்ரிஷா நடித்த வர்ஷம் தெலுங்குப் படம் தான் இப்போது தமிழில் மழை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்படுதிறது. தெலுங்கில் த்ரிஷாகாட்டிய அதீதமான கவர்ச்சி பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாக மழைக் குளியல் காட்சிகளில் த்ரிஷா கவர்ச்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, ஆந்திரா மணவாடுகளை உசுப்பேத்தினார்.த்ரிஷாவின் கவர்ச்சிக்காகவே படு ஓட்டம் ஓடியது.

தாராள விஷயத்தில் த்ரிஷாவுக்கெல்லாம் த்ரிஷாவாக விளங்குபவர் ஸ்ரேயா. தெலுங்கில் அவர் செய்த ரோலை தமிழில் செய்யும் ஸ்ரேயா,மழை படத்தில் கலக்கி எடுத்து வருகிறார்.

தனது மகன் சரணின் மூலம் மழை படத்தை தயாரிக்கும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதலில் த்ரிஷாவைத்தான் நடிக்கக்கூப்பிட்டுள்ளார். ஆனால் தெலுங்கில் காட்டியது போல எல்லாம் தமிழில் கவர்ச்சி காட்ட முடியாது என்ற தனது பாலிஸியைக் கூறி ஸாரிசொல்லி விட்டார் த்ரிஷா.

இதையடுத்துத் தான் ஸ்ரேயாவைப் பிடித்துப் போட்டனர். ஸ்ரேயாவை புக் செய்யும் போதே த்ரிஷா மறுத்ததையும், அவர் நடுங்கும்வகையில் தூக்கல் கவர்ச்சி வேண்டும் என்று சொல்லி அதற்கு ஸ்ரேயாவிடம் உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டனர்.

படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோ. ஒரு பாடலுக்கு மழையில் நனைந்தபடி ஹீரோயினுக்கு லிப்-டு-லிப் கிஸ் தர வேண்டும் ஹீரோ. ஆனால்,ஹீரோ ரவி சொதப்பியெடுக்க, அந்தக் காட்சியில் தானே முன் வந்து மெளத் கிஸ் கொடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் ரொங்கவைத்தார் ஸ்ரேயா.

மேற்படி விஷயங்களில் கலக்கி வருகிறாராம் ஸ்ரேயா. கதைப்படி நாயகனும், நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை பெய்யுமாம். சாதாதூறல் காட்சிக்கே நம் டைரக்டர்கள், ஹீரோயினை வெள்ளை உடை அணிய விட்டு ஆட்டம் போட்டு கலக்க வைப்பார்கள்.

இந்தப் படத்திலோ அவ்வப்போது மழை, அடிக்கடி மழை, எடுத்ததற்கெல்லாம் மழை. கவர்ச்சிக்கு கேட்க வேண்டுமா!

மழைக் காட்சிக்காக சூட்டிங்கில் அடிக்கடி தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்ட இருந்ததால் ஸ்ரேயாவுக்கு ஜல்ப்பு பிடித்து விட்டதாம்.இதனால் வெந்நீரை ரெடி செய்து பதமான ஹீட்டில் அதை மழையாக பெய்ய வைத்து காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.ஸ்ரேயாவுக்காக வெந்நீர் மழை பெய்து கொண்டிருக்கிறது சூட்டிங் நடக்கும் செட்டில்.

ஸ்ரேயா, த்ரிஷா விஷயத்தில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. ஸ்ரேயா நடித்த முதல் தமிழ்ப் படம் எனக்கு 20 உனக்கு 18. இதில்த்ரிஷாதான் நாயகி. அவருடன் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார் ஸ்ரேயா.

ஹீரோயின் என்று கூட்டி வந்துதான் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா ஸ்ரேயாவை அதில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் இடையில் புகுந்தத்ரிஷா, முதல் ஹீரோயினாகி விட்டார், ஸ்ரேயா பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

இப்போது த்ரிஷா மறுத்த படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

Read more about: actress cinema ramya shriya trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil