»   »  தெளிவு ஷ்ரேயா! ரஜினியுடன் நடிக்கும் சிவாஜியை முடித்து விட்டுத் தான் தனுஷுடன் திருவிளையாடலில் நடிப்பேன் என படு கறாராகசொல்கிறார் ஷ்ரேயா. மழை நாயகி ஷ்ரேயா, சூப்பர் ஸ்டாருடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளார். ரஜினியுடன் புக் ஆவதற்கு முன்பாகவே அவரது மருமகன் தனுஷுடன், திருவிளையாடல் படத்தில் நடிக்க புக் ஆகியிருந்தார்ஷ்ரேயா. இந்த நிலையில் ரஜினி பட வாய்ப்பு வந்து விட்டதால், திருவிளையாடலை அப்படியே விட்டு விட்டு சிவாஜிக்கு வந்துவிட்டார். ஒரே சமயத்தில் மாமனார், மருமகனுடன் நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்ற ஷ்ரேயாவுக்கு திடீரெனக்குழப்பம் வந்து விட்டது. இது சரியா, நியாயமா, தப்பாக தெரியாதா என்று மனசுக்குள் ஏகப்பட்ட குட்டி சுனாமிகள் எக்குத்தப்பாகவந்து குழப்பி அடித்து விட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகு திருவிளையாடலில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்து திருவிளையாடல் தரப்பில்தெரிவித்துள்ளார். குழம்பிப் போன அவர்கள் இதனால் ஒரு பிரச்சினையும் இல்லை, தப்பே இல்லை என்று கூறிசமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து திருவிளையாடலில் நடிப்பதை சற்றே ஒத்திவைத்துள்ளாராம். இதுகுறித்து ஷ்ரேயாவிடம் கேட்டால், முதலில்சிவாஜி படத்தை முடிப்பது தான் எனது ஒரே எண்ணம். அதை முடித்து விட்டுத் தான் திருவிளையாடலில் நடிப்பேன்.அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. முதலில் தயங்கியது உண்மைதான்,இருப்பினும் இப்போது நான் படத்தில் தான் உள்ளேன். ரஜினிசாருடன் நடிப்பது ரொம்பப் பெருமையாக உள்ளது. எங்கேயோ ஹரித்வாரில் பிறந்த நான், மும்பையில் வளர்ந்து, மாடலிங்கில் புகுந்து, தெலுங்கில் அறிமுகமாகி இப்போதுதமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிப்பது என்றால் சும்மாவா என்ன? ஆரம்பத்தில் நிறைய தெலுங்குப்படங்களில் நடித்தேன். ஆனால் மழை வந்து எனக்கு தமிழில் நல்ல முகவரியைக் கொடுத்துள்ளது. மழை படத்தில் கிடைத்த புகழால் தான் சிவாஜியில்ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன், திரிஷா எனக்குப் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அவரும்,நானும் நல்ல பிரண்ட்ஸ், ஆனால் இரண்டு பேருமே கடும் எதிரிகள் என்று தப்புத் தப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த செய்திகள் தான் தப்பு. தொடர்ந்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அசத்தோஅசத்தென்று அசத்தாமல் விடப் போவதில்லை என்று குறும்புச் சிரிப்புடன் கூறிப் பறந்தார் ஷ்ரேயா. அடடா!

தெளிவு ஷ்ரேயா! ரஜினியுடன் நடிக்கும் சிவாஜியை முடித்து விட்டுத் தான் தனுஷுடன் திருவிளையாடலில் நடிப்பேன் என படு கறாராகசொல்கிறார் ஷ்ரேயா. மழை நாயகி ஷ்ரேயா, சூப்பர் ஸ்டாருடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளார். ரஜினியுடன் புக் ஆவதற்கு முன்பாகவே அவரது மருமகன் தனுஷுடன், திருவிளையாடல் படத்தில் நடிக்க புக் ஆகியிருந்தார்ஷ்ரேயா. இந்த நிலையில் ரஜினி பட வாய்ப்பு வந்து விட்டதால், திருவிளையாடலை அப்படியே விட்டு விட்டு சிவாஜிக்கு வந்துவிட்டார். ஒரே சமயத்தில் மாமனார், மருமகனுடன் நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்ற ஷ்ரேயாவுக்கு திடீரெனக்குழப்பம் வந்து விட்டது. இது சரியா, நியாயமா, தப்பாக தெரியாதா என்று மனசுக்குள் ஏகப்பட்ட குட்டி சுனாமிகள் எக்குத்தப்பாகவந்து குழப்பி அடித்து விட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகு திருவிளையாடலில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்து திருவிளையாடல் தரப்பில்தெரிவித்துள்ளார். குழம்பிப் போன அவர்கள் இதனால் ஒரு பிரச்சினையும் இல்லை, தப்பே இல்லை என்று கூறிசமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து திருவிளையாடலில் நடிப்பதை சற்றே ஒத்திவைத்துள்ளாராம். இதுகுறித்து ஷ்ரேயாவிடம் கேட்டால், முதலில்சிவாஜி படத்தை முடிப்பது தான் எனது ஒரே எண்ணம். அதை முடித்து விட்டுத் தான் திருவிளையாடலில் நடிப்பேன்.அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. முதலில் தயங்கியது உண்மைதான்,இருப்பினும் இப்போது நான் படத்தில் தான் உள்ளேன். ரஜினிசாருடன் நடிப்பது ரொம்பப் பெருமையாக உள்ளது. எங்கேயோ ஹரித்வாரில் பிறந்த நான், மும்பையில் வளர்ந்து, மாடலிங்கில் புகுந்து, தெலுங்கில் அறிமுகமாகி இப்போதுதமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிப்பது என்றால் சும்மாவா என்ன? ஆரம்பத்தில் நிறைய தெலுங்குப்படங்களில் நடித்தேன். ஆனால் மழை வந்து எனக்கு தமிழில் நல்ல முகவரியைக் கொடுத்துள்ளது. மழை படத்தில் கிடைத்த புகழால் தான் சிவாஜியில்ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன், திரிஷா எனக்குப் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அவரும்,நானும் நல்ல பிரண்ட்ஸ், ஆனால் இரண்டு பேருமே கடும் எதிரிகள் என்று தப்புத் தப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த செய்திகள் தான் தப்பு. தொடர்ந்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அசத்தோஅசத்தென்று அசத்தாமல் விடப் போவதில்லை என்று குறும்புச் சிரிப்புடன் கூறிப் பறந்தார் ஷ்ரேயா. அடடா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியுடன் நடிக்கும் சிவாஜியை முடித்து விட்டுத் தான் தனுஷுடன் திருவிளையாடலில் நடிப்பேன் என படு கறாராகசொல்கிறார் ஷ்ரேயா. மழை நாயகி ஷ்ரேயா, சூப்பர் ஸ்டாருடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளார்.

ரஜினியுடன் புக் ஆவதற்கு முன்பாகவே அவரது மருமகன் தனுஷுடன், திருவிளையாடல் படத்தில் நடிக்க புக் ஆகியிருந்தார்ஷ்ரேயா. இந்த நிலையில் ரஜினி பட வாய்ப்பு வந்து விட்டதால், திருவிளையாடலை அப்படியே விட்டு விட்டு சிவாஜிக்கு வந்துவிட்டார்.

ஒரே சமயத்தில் மாமனார், மருமகனுடன் நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்ற ஷ்ரேயாவுக்கு திடீரெனக்குழப்பம் வந்து விட்டது. இது சரியா, நியாயமா, தப்பாக தெரியாதா என்று மனசுக்குள் ஏகப்பட்ட குட்டி சுனாமிகள் எக்குத்தப்பாகவந்து குழப்பி அடித்து விட்டன.

நீண்ட யோசனைக்குப் பிறகு திருவிளையாடலில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்து திருவிளையாடல் தரப்பில்தெரிவித்துள்ளார். குழம்பிப் போன அவர்கள் இதனால் ஒரு பிரச்சினையும் இல்லை, தப்பே இல்லை என்று கூறிசமாதானப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து திருவிளையாடலில் நடிப்பதை சற்றே ஒத்திவைத்துள்ளாராம். இதுகுறித்து ஷ்ரேயாவிடம் கேட்டால், முதலில்சிவாஜி படத்தை முடிப்பது தான் எனது ஒரே எண்ணம். அதை முடித்து விட்டுத் தான் திருவிளையாடலில் நடிப்பேன்.

அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. முதலில் தயங்கியது உண்மைதான்,இருப்பினும் இப்போது நான் படத்தில் தான் உள்ளேன். ரஜினிசாருடன் நடிப்பது ரொம்பப் பெருமையாக உள்ளது.

எங்கேயோ ஹரித்வாரில் பிறந்த நான், மும்பையில் வளர்ந்து, மாடலிங்கில் புகுந்து, தெலுங்கில் அறிமுகமாகி இப்போதுதமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிப்பது என்றால் சும்மாவா என்ன? ஆரம்பத்தில் நிறைய தெலுங்குப்படங்களில் நடித்தேன்.

ஆனால் மழை வந்து எனக்கு தமிழில் நல்ல முகவரியைக் கொடுத்துள்ளது. மழை படத்தில் கிடைத்த புகழால் தான் சிவாஜியில்ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

எனக்கு சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன், திரிஷா எனக்குப் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அவரும்,நானும் நல்ல பிரண்ட்ஸ், ஆனால் இரண்டு பேருமே கடும் எதிரிகள் என்று தப்புத் தப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த செய்திகள் தான் தப்பு. தொடர்ந்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அசத்தோஅசத்தென்று அசத்தாமல் விடப் போவதில்லை என்று குறும்புச் சிரிப்புடன் கூறிப் பறந்தார் ஷ்ரேயா. அடடா!


Read more about: shriyas smartness

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil