ஸ்பாட்டில் ஓவர் கூட்டம்.. விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் இருந்து திடீரென வெளியேறிய ஸ்ருதிஹாசன்!
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமான கூட்டம் கூடியதால், படப்பிடிப்பில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் திடீரென வெளியேறினார்.
Recommended Video
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம், லாபம். இவர் இதற்கு முன், இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களை இயக்கியவர் .
'லாபம்' படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின்.

லாபம் என்றால்
சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும், லாபம் என்றால் என்ன என்பது பற்றியும் பேசும் இந்தப் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கிளைமாக்ஸ் காட்சி
கொரோனா லாக்டவுன் காரணமாக, மற்ற படங்களைப் போல, இதன் ஷூட்டிங்கும் தொடங்கப் படாமல் இருந்தது. அரசு, தளர்வுகளை அறிவித்ததை அடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின. லாபம் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே மீண்டும் தொடங்கி முடிந்தது. இப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுகிறது.

கூடி விட்டனர்
இந்தக் காட்சிகள், கிருஷ்ணகிரி அருகே நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். அந்தப் பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடந்ததில்லை என்பதால், அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் படப்பிடிப்பை காண கூடிவிட்டனர்.

கூட்டம் இல்லாமல்
அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கூட்டம் இல்லாமல் இருந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று ஸ்ருதிஹாசன் கூறினார். ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கொரோனா பயம் காரணமாக, நடிகை ஸ்ருதிஹாசன் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.

பாதியில் சென்றார்
இதுபற்றி படக்குழுவிடம் கேட்டபோது, உண்மைதான் என்று தெரிவித்தனர். அவ்வளவு கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருந்த தாகவும் ஸ்ருதிஹாசன் பங்கேற்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டது என்றாலும் கொரோனா பயம் காரணமாக, அவர் பாதியில் சென்றுவிட்டார் என்றனர்.

உரிமை உண்டு
முன்னதாக அவர் ட்விட்டரில், கொரோனா அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது. கொரோனா இன்னும் முடிந்துவிடவில்லை. விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால், நடிகையாகவும் தனி நபராகவும் என் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் உரிமை எனக்கு உண்டு என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











