சிம்புவின் பத்து தல படத்தின் சூட்டிங் நிறைவு.. முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணி!

சென்னை : மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பத்து தல படத்தின் சூட்டிங் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தப் படம் அடுத்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிம்பு படங்களின் வெற்றி

சிம்பு படங்களின் வெற்றி

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றி நடிகர் சிம்புவிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு படங்களிலும் தன்னுடைய மாறுபட்ட மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் சிம்பு. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பத்து தல படம்

பத்து தல படம்

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். முன்னதாக ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணாவின் 3வது படமாக பத்து தல உருவாகியுள்ளது.

பத்து தல படத்தின் சூட்டிங் நிறைவு

பத்து தல படத்தின் சூட்டிங் நிறைவு

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததையடுத்து படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக என்ஜாய்மெண்ட் தான்

அடுத்ததாக என்ஜாய்மெண்ட் தான்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் அல்லது சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெளிநாட்டு சுற்றுலாவிற்கு சிம்பு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றுலாவை முடித்து பின்பே தன்னுடைய அடுத்தப் படத்தின் வேலைகளில் சிம்பு ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X