ஜப்பானில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஹன்சிகா
சென்னை: வேட்டை மன்னன் படப்பிடிப்பிற்காக சிம்புவும், ஹன்சிகாவும் விரைவில் ஜப்பான் செல்லவிருக்கின்றனர்.
கோலிவுட்டில் காதல் ஜோடிகள் வருவதும், போவதும் உண்டு. இந்நிலையில் முன்னணி நாயகியான ஹன்சிகா சிம்புவை காதலிக்கிறார். அதை துணிச்சலாக அறிவிக்கவும் செய்தார்.
ஆனால் அவர் காதலை அறிவித்த பிறகு அவருக்கு வரும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

2 படங்கள்
சிம்புவும், ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படப்பிடிப்புகளின்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கக்கூடும்.

வாலு முடிந்தது
இந்தா அந்தா என்று ஒரு வழியாக வாலு படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

வேட்டை மன்னன்
வாலுவை போன்றே இழுத்துக் கொண்டிருக்கும் வேட்டை மன்னன் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள வேலைகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த இயக்குனர் நெல்சன் மற்றும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி ஆகியோர் ஜப்பானுக்கு லொகேஷன் பார்க்க சென்றுள்ளார்களாம்.

காதல் ஜோடி
லொகேஷன் பார்ப்பு முடிந்த உடன் சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் ஜப்பானுக்கு பறக்கவிருக்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











