»   »  லேகா 'கதி'?- சிம்பு மெளனம்!

லேகா 'கதி'?- சிம்பு மெளனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து சிம்பு கருத்து தெரிவிக்காமல் மெளனம் காக்கிறார்.

Click here for more images

சிம்பு நடித்து வரும் புதிய படம் கெட்டவன். இதில் அவருக்கு லேகா வாஷிங்டன் ஜோடியாக நடித்து வந்தார். பிராமணப் பெண் கேரக்டரில் தயிர் சாதம் என்ற பட்டப் பெயருடன் கூடிய வேடத்தில் அவர் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு லேகாவை படத்திலிருந்து தூக்க சிம்பு முடிவு செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. லேகாவின் நடிப்பு சிம்புவுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும் இதனால் அவரை நீக்கி விட்டு ஆசின் அல்லது திரிஷாவைப் போட சிம்பு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதை லேகா வாஷிங்டன் மறுத்தார். இந்த நிமிடம் வரை நான்தான் நாயகி என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து லேகா கூறுகையில், கெட்டவன் படத்தில் நான் தான் நாயகியாக நீடிக்கிறேன். இதுதொடர்பாக வந்த செய்திகள் உண்மை இல்லை. ஏன் இப்படி செய்திகள் கிளம்புகின்றன என்று எனக்குத் தெரியவில்லை என்றார் லேகா.

இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது, ஹீரோயின் குறித்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றார். இது நாயகிக்கான படம் அல்ல. ஒரு பெண்ணால் கெட்ட ஒரு ஆணின் கதைதான் இது. படத்தில் இரு ஹீரோயின்கள் உள்ளனர். பிற விவரங்களை பிறகு கூறுகிறேன் என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார் சிம்பு.

நந்தகுமார் இயக்கி வரும் கெட்டவன் படத்தின் கதாசிரியர் சிம்புதான். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

லேகா இருக்கிறாரா, இல்லையா என்பதை சிம்புவே உறுதிப்படுத்தினால்தான் உண்டு.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: lekha

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more