மாஸ் காட்டும் ஸ்லிம் சிம்பு... ஸ்பாட்டில் குவியும் ரசிகர்கள்... பரபரப்பில் மாநாடு படப்பிடிப்பு
சென்னை: மாநாடு படப்பிடிப்பில் நடிகர் சிம்புவை காண ஏராளமான ரசிகர்கள் கூடுவதால், பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகளை பலப்படுத்தி உள்ளனர்.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' ஆகிய படங்களைத் தயாரித்தவர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் பரபரப்பாகத் தொடங்கியது. இயக்குனர் சேரன் கிளாப் அடித்தும், சீமான் கேமராவை ஆன் செய்தும் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். இதில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் சீமான், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இஸ்லாமிய இளைஞர்
வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் திடீரென லொகேஷன் மாறியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க் ஒன்றில் இப்போது நடந்து வருகிறது.

ஒழுங்காக வருகிறார்
படத்துக்காக ஸ்பெஷல் செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில், சிம்புவுடன், கல்யாணி, அஞ்சனா கீர்த்தி பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் இருநூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஆடி வருகின்றனர். இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக, படப்பிடிப்புக்கு சிம்பு ஒழுங்காக வருகிறார் எனப் படக்குழு தெரிவித்திருந்தது.

அதிகமான ரசிகர்கள்
இந்நிலையில், சிம்புவைக் காண தினமும் அதிகமான ரசிகர்கள் படப்பிடிப்புக்கு வருகின்றனர். அவர்கள், அவருடன் போட்டோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, செக்யூரிட்டியை அதிகப்படுத்தி உள்ளனர். இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, 'சிம்புவைக் காண அதிகமான ரசிகர்கள் வருவது உண்மைதான். இதனால் படப்பிடிப்புக்கு பாதிப்பில்லை. இன்றோடு, சென்னை படப்பிடிப்பு முடிகிறது' என்றார்.


Click it and Unblock the Notifications