சிம்பு நடிக்கும் ‘பத்து தல‘ படத்தின் மாஸ் அப்டேட் !

சென்னை : சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க உள்ளது.

இப்படத்தில் சிலம்பரசன் ஒரு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கிறார்.

பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷபுத்திரன், தீஜய் ஆகியோரும் லீட் ரோலில் நடிக்கின்றனர்

முஃப்தி

முஃப்தி

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தமிழில் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் ரீமேக்கையும் இயக்குநர் நரதனே இயக்கி வந்தார். இந்தப் படம் தாமதமானதால், யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் நரதன். இதனால் முஃப்தி தமிழ் ரீமேக் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

செப்டம்பரில் படப்பிடிப்பு

செப்டம்பரில் படப்பிடிப்பு

தற்போது அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்துமே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா மீதமுள்ள காட்சிகளை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேங்ஸ்டராக சிம்பு

கேங்ஸ்டராக சிம்பு

பத்து தல என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சிலம்பரசன் ஒரு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் தமிழ் ரீமேக்கில் பிரியா பவானி சங்கர், மெட்ராஸ் புகழ் கலையரசன், மனுஷபுத்திரன் மற்றும் அசுரன் புகழ் தீஜய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சில்லுனு ஒரு காதலுக்கு பிறகு கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா.

மாநாடு

மாநாடு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அரசியல் த்ரில்லர் படம் மாநாடு. இப்படத்தில், சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

உடல் எடையை குறைந்து

உடல் எடையை குறைந்து

மாநாடு படம் முடிந்ததை அடுத்து,இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமைடா படத்தில் இணைந்துள்ளனர். வெந்து தணிந்ததது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்திற்காக சிம்பு உடலைக் கடுமையாக குறைத்திருக்கிறார். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி உடல் எடையை குறைத்திருக்கிறார். உடல் எடை குறைப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

ஹன்சிகாவின் 50வது படம்

ஹன்சிகாவின் 50வது படம்

ஹன்சிகாவின் 50 வது திரைப்படம் மஹா, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சிம்புவிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. சிம்பு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் வந்ததும் படத்தில் நிறைய மாற்றம் செய்யப்பட்டு அவருக்காக ஒரு பாடல் காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. ஹன்சிகாவின் 50 வது படமாக இருந்த மஹா தற்போது சிம்பு நடிக்கும் படமாக மாறி மார்க்கெட் வேல்யூவும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X