லேகாவுக்கு சிம்பு கல்தா?

By Staff


கெட்டவன் படத்திலிருந்து லேகா வாஷிங்டனைத் தூக்கி விட்டு ஆசினைப் போடலாமா என்று சிம்பு யோசித்து வருகிறாராம். அப்படியே திரிஷாவுக்கும் தூது விட்டுள்ளாராம்.

Click here for more images

சிம்பு நடித்து வரும் புதுப் படம் கெட்டவன். இதில் அவருக்கு ஜோடியாக, தயிர் சாதம் என்ற செல்லப் பெயருடன் கூடிய கேரக்டரில் அழகுப் பெண் லேகா வாஷிங்டன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் 20 நாள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், இப்போது லேகாவுக்குப் பதில் வேறு ஹீரோயினைப் போட திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. இதற்காக திரிஷாவையும், ஆசினையும் அணுகியுள்ளாராம்.

இப்படம் குறித்த அறிவிப்பு 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது. 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தில் லேகா தவிர நமீதாவும் இருக்கிறார்.

லேகா, எஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியரிங் செய்து கொண்டு ஜாலியாக இருந்தார். அவரை ஒரு விழாவில் பார்த்து அசந்து போன சிம்பு, லேகாவை தனது கெட்டவன் படத்தில் நாயகிகளில் ஒருவராக மாற்றி விட்டார்.

ஆனால், தோற்ற அழகு அசத்தலாக இருப்பதைப் போல லேகாவின் நடிப்பு பிரமாதமாக இல்லை என்ற கருத்துக்கு வந்துள்ளாராம் சிம்பு. இதனால் அவரை மாற்றி விடத் தீர்மானித்துள்ளார். ஆசின் அல்லது திரிஷாவை புக் செய்யலாமா என்ற யோசனையில் தற்போது சிம்பு உள்ளார்.

இதற்காக இருவரையும் அணுகியுள்ளாராம். இதை கெட்டவன் யூனிட்டும் உறுதி செய்துள்ளது.

திரிஷாவை விட ஆசின்தான், சிம்புவை வெகுவாக கவர்ந்துள்ளாராம். அதிலும் லேகாவின் வேடம் பிராமணப் பெண் கேரக்டர் என்பதால் அதற்கு ஆசின் படு பொருத்தமாக இருப்பார் என்பது சிம்புவின் கருத்து. இதனால்தான் ஆசினை முதல் சாய்ஸாக வைத்துள்ளாராம்.

ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆசின் ஒப்பந்தமாகியுள்ளார். இதைப் பயன்படுத்தி கெட்டவன் படத்திலும் ஆசினை தனது ஜோடியாக்க முயன்று கொண்டிருக்கிறாராம் சிம்பு.

சிம்பு வலையில் ஆசின் சிக்குவாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X