சூட்டிங் ஸ்பாட்
கோவாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகை சிம்ரனிடம் உள்ளூர் ரெளடிகள் கலாட்டா செய்ததால் பரபரப்புஏற்பட்டது.
அர்ஜூனும் சிம்ரனும் நடிக்கும் ஒற்றன் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. படக் குழுவினர்சூட்டிங்குக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். சிம்ரன் தனியே அமர்ந்திருந்தார்.
அப்போது குடிபோதையில் அங்கு வந்த ரெளடிகள் சிலர் சிம்ரனின் மிக ஆபாசமாகப் பேசியதாகத் தெரிகிறது.மேலும் அவரது கையையும் பிடித்து இழுத்துள்ளனர்.
இதையடுத்து சிம்ரன் அவர்களைத் திட்ட, அவர்களும் பதிலுக்கு தாக்க வர பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அர்ஜூனும் படப்பிடிப்புக் குழுவினரும் ஓடி வந்து சிம்ரனைக் காத்துள்ளனர். அப்போதுஅர்ஜூனுக்கும் ரெளடிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொது மக்கள் தலையிட்டு படக் குழுவினரை காத்தனர். ரெளடிகளையும் விரட்டியடித்தனர்.
More from Filmibeat
alanganallur artgallery astrology chennai florals jallikkattu jothika kural palamedu rini siddarth simran surya tamil news tamilnadu thatstamil thrisha


Click it and Unblock the Notifications











