»   »  சிம்ரன் டீச்சர்

சிம்ரன் டீச்சர்

Subscribe to Oneindia Tamil

தனது ஆசையை கிச்சா வயசு 16 படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார் சிம்ரன். இந்தப் படத்தில்சிம்ரனுக்கு ஜோடியாக அவரது கணவர் தீபக்கே நடித்திருக்கிறார்.

திடீரென தீபக் பாஹாவைக் கைப்பிடித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு டாடா சொல்லிவிட்டுப் போன சிம்ரனுக்குகோலிவுட்டில் இன்னும் குறையவே இல்லை. இதனால் அவரது டெல்லி வீட்டை நம்மவர்கள் போய் தட்டியவாரேஇருக்க, ரொம்பவே சலித்துக் கொண்டு இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கினார்.

அதில் ஒன்று தான் கிச்சா வயசு 16. இதில் சிம்ரன் டீச்சராக நடிக்க, அவரிடம் படிக்கும்16 வயது பையன் (பாய்ஸ்பட ஹீரோக்களில் ஒருவரான மணிகண்டன்) சிம்ரன் மீது காதல் கொள்வது தான் கதை. வயதையும் வரம்பையும்மீறிய காதல் கதையை ஹாஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்களாம்.

இதில் சிம்ரனின் முறை மாமனாக ஜெய் ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். அவருக்கு கலெக்டர் வேடம் தரப்பட்டுசூட்டிங்கும் நடந்தது. சிமரனுக்கு துணைக்கு கணவர் தீபக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜரானார்.

இந் நிலையில் திடீரென தயாரிப்பாளரையும் இயக்குனரையும் கூப்பிட்ட சிம்ரன், தனது கணவர் தீபக்கையேஹீரோவாக (ஜெய் ஆகாஷ் நடித்த காரெக்டரில்) நடிக்க வைத்தால் என்ன என்று கேட்க, அவர்கள் முதலில்தயங்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து சிம்ரனும் இந்த ப்ராஜெக்டில் இருந்து கழன்று கொள்ளப் போவதாக லேசாக மிரட்ட, அரண்டுபோன தயாரிப்பாளர் ஆகாஷிடம் பேசியிருக்கிறார். இதையடுத்து படத்தில் இருந்து கழன்று கொண்டிருக்கிறார்(கழற்றி விடப்பட்டிருக்கிறார்) ஜெய் ஆகாஷ். இப்போது அந்த கேரக்டரில் தீபக்கே நடிக்கிறார்.

தென் தமிழகத்தின் இயற்கை வளம் கொஞ்சும் முட்டம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி ஆகிய இடங்களில்சூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது.

அவுட்டோரில் சூட்டிங் என்பதால் சிம்ரன் தனக்கும் கணவருக்கும் கொஞ்சம் பிரைவசி வேண்டும் என்றுதயாரிப்பாளரை நிர்பந்தப்படுத்த, வேறு வழியில்லாமல் சென்னையில் இருந்து ஏசி செய்யப்பட்ட கேரவன்வேனை கொண்டு வந்து தந்தார்களாம். ஷாட் முடிந்தவுடன் இருவரும் இந்த ஏசி வேனுக்குள் புகுந்து கொண்டுஇளைப்பாறினார்களாம்.


ஹீரோயினுக்கு இணையாக இந்த வேனுக்கே பல லட்சம் செலவாகியதாம். இது இப்படி இருக்க, சூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே, தீபக்கின் சம்பள விஷயம் குறித்தும் வாய் திறந்திருக்கிறார் சிம்ரன். தீபக்கின் லெவலைவிட மிகப் பெரிய சம்பளத்தையே தயாரிப்பாளரும் பேசியிருக்கிறார். அது போதாது என்று சொல்லி சம்பளத்தைஏற்றினாராம் சிம்ரன்.

வேறு வழியின்றி தயாரிப்பாளர் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அட்வான்சாக பெரும் தொகையைக்கொடுத்தவர் மீதி பணத்தை பட ரிலீசின்போது தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால், உடனே காசு கொடுத்தால்தான் ஆச்சு என சிம்ரன் தகராறு செய்ய, வட்டிக்கு பணம் புரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்அந்த தயாரிப்பாளர்.

ஜெய் ஆகாஷ் நடித்திருந்தால் செலவே இருந்திருக்காது (முடிந்தால் அவரிடமே பணம் வாங்கியிருப்பார்கள்),கேரவன் வேன் தேவைப்பட்டிருக்காது. ஆனால், நினைத்ததற்கு மாறாக சிம்ரனால் செலவு எகிறிவிடதயாரிப்பாளர் புலம்பித் தத்தளிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் சிம்ரன் என்றாலே லோ-ஹிப் உடை, கையை மேலே தூக்கிக் கொண்டு இடுப்பை முறுக்கி ஒரு டான்ஸ்என்பது தான் சினிமா இலக்கணம். ஆனால், அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சிம்ரனும், ஆமா, என்வைப் அப்படி நடிக்காது என தீபக்கும் சொல்லிவிட இயக்குனர் டென்சனாகிவிட்டதாக கேள்வி.

இந்த விஷயங்கள் எல்லாம் கேள்விப்பட்டு, சிம்ரனை புக் செய்ய விரும்பிய பல தயாரிப்பாளர்களும் அந்தஎண்ணத்தையே குழி தோண்டு புதைத்துவிட்டதாக சொல்கிறார்கள் (இப்பவாவது புத்தி வந்ததே!).

அப்படி இப்படியாக கிச்சா வயசு 16யை பெரும்பாலும் எடுத்து முடித்துவிட்டார்கள். சிம்ரன்-தீபக் போர்ஷன்ஸ்முடிக்கப்பட்டுவிட்டன.

இந் நிலையில் சந்திரமுகியில் புக் ஆகியிருக்கிறார் சிம்ரன். இதில் சிம்ரனுக்கு ஆரம்பத்திலேயே கடிவாளம்போட்டுவிட்டார்களாம். சம்பளமாக அவர் கேட்டதை விட குறைவாகவே தர ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்.ரஜினி- சிவாஜி புரொடக்ஷன்ஸ் கூட்டணி என்பதால், பிரச்சனை செய்ய முடியாமல் அமைதியாக, நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிம்ரன்.

இப்போது லண்டனில் இருக்கும் சிம்ரனும் தீபக்கும் நவம்பர் முதல் வாரத்தில் சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிறார்கள்.வந்தவுடன் கிச்சாவின் சில சீன்களை நடித்துத் தந்துவிட்டு சந்திரமுகி சூட்டிங்கில் சுடச் சுட இறங்குவாராம் சிம்ரன்.சூட்டிங் ஸ்பாட்டுக்குள் தீபக்கை விடுவார்களா என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil