»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூ படத்தில் முதலில் மிக மகிழ்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டு மெளத் கிஸ் எல்லாம் கொடுத்து டைரக்டர்-நடிகர்சூர்யாவை சூடாக்கிய சிம்ரன், வர வர சூர்யாவைக் கண்டால் பார்வையாலேயே சுட்டெரிக்கிறார். சூட்டிங்குகேவராமல் டேக்கா கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

தனக்கு வாலி படம் மூலம் புது வாழ்வு கொடுத்தவர் என்பதால் சிம்ரன் ரொம்பவே தான் இறங்கிப் போனார்.அதை சூர்யா நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். ஏகப்பட்ட படுக்கை அறை காட்சிகளை எடுத்தார். கமலேநொந்துவிடும் அளவுக்கு சிம்ரனுக்கு லிப் கிஸ் கொடுத்து அதை ஸ்டில்களாகவும் எடுத்து பத்திரிக்கைகளுக்குவினியோகித்தார்.

இதை சிம்ரனுக்கு வேண்டப்பட்ட அந்த இந்திக்கார இளைஞர் (இவரை சிம்ரன் திருமணம் செய்துகொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது) கொஞ்சமும் விரும்பவில்லை. இருந்தாலும் படத்தில் இருந்து விலகாமல்தொடர்ந்து நடித்து வந்தார் சிம்ரன்.

இந் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் சிம்ரனிடம் சூர்யா சமீப காலமாக கொஞ்சம் ஓவராகவே நடந்து கொள்ளஆரம்பித்தாராம்.

சமீபத்தில் சிம்ரனின் உடையை சூர்யா பிடித்து இழுக்க அது கையோடு வந்துவிட, சூட்டிஙஸ்பாட்டில் வைத்தே மகா மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு விட்டு வெளியேறினாராம் சிம்ரன்.

மேலும் இப்போது ஒரு இந்தியில் படத்தில் புக் ஆகியுள்ளதால், மும்பைக்குப் பறந்து விட்ட சிம்ரன் நியூசூட்டிங்குக்கே வருவதில்லை.

சிம்ரன் மீது மகா கோபம் அடைந்த சூர்யா உடனே கிரணை படத்தில் புக் செய்தார். இந்தப் படத்தில் கிரண் நடிப்பதுதெரிந்த செய்தி தான் என்றாலும் இப்போது தான் மேற்சொன்ன காரணங்கள் வெளியே கசிய ஆரம்பித்துள்ளன.

இப்போது படத்தில் சிம்ரனை டம்மியாக்கும் வேலைகளிலும் சூர்யா இறங்கிவிட்டாராம்.

கதையில் ஏகப்பட்டமாற்றங்களைச் செய்து சிம்ரனை செகண்ட் ஹீரோயின் லெவலுக்குக் கொண்டு போய் விட்டாராம்.

கிரணுக்கு நிறைய சீன்களையும் கொடுத்து, கவர்ச்சியையும் கொட்ட வாய்ப்பளித்துள்ளாராம். படத்தில் சிம்ரனைக்காணாமல் போகச் செய்யும் அளவுக்கு கிரண் காட்டி வருகிறாராம்.

எப்படியும் நடிக்கத் தயார் என்று கிரண்கூறிவிட்டதால் இவருக்கும் சூர்யாவுக்கும் லிப்-டுலிப் கிஸ் சீன்கள் இருக்கும் என்கிறார்கள்.

பரசுராம் படத்தில் கிரணை ஓரம் கட்டினார் காயத்ரி ரகுராம். இப்போது அந்த ஆத்திரத்தை நியூ படம் மூலம்சிம்ரனிடம் காட்டி தீர்த்துக் கொள்ளப் போகிறார்
போலிருக்கிறது கிரண்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil