சூட்டிங் ஸ்பாட்
பிரபு உள்ளிட்ட 4 மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் நடிக்கும் பந்தா பரமசிவம் படத்தில் சிம்ரன் ஒரு பாட்டுக்கு டான்ஸ்ஆடுகிறார். அவர் யாருடன் சேர்ந்து ஆடுகிறார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
சினிமா பி.ஆர்.ஓ. செல்வகுமார் (விஜய் படங்களுக்கு இவர்தான் பி.ஆர்.ஓ) தயாரிப்பில் பந்தா பரமசிவம்உருவாகிறது.
பிரபு தவிர அப்பாஸ், லிவிங்ஸ்டன், கலாபவன் மணி ஆகியோரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்குஜோடியாக ரம்பா, அபிநயஸ்ரீ, மோனிகா ஆகியோர் ஹீராயின்களாக நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட சம்மதித்துள்ளாராம் சிம்ரன்.
விஜய் பெர்சனலாக கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த சம்மதம் கிடைத்துள்ளதாம். கலாபவன் மணியுடன் சேர்ந்துசிம்ரன் ஆடலாம் என்கிறது பி.ஆர்.ஓ. வட்டாரம்.
Comments


Click it and Unblock the Notifications