»   »  மீண்டும் வந்தார் சிந்து துலானி!

மீண்டும் வந்தார் சிந்து துலானி!

Subscribe to Oneindia Tamil

எழுச்சி நாயகி சிந்து துலானி சின்ன இடைவேளைக்குப் பிறகு சிங்கார நடை போடசீறிப் பாய்ந்து வருகிறார் பசுபதி படம் மூலமாக.

அலையடிக்குது படம் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் நெஞ்சங்களில் கிளாமர்அலையைத் தவழ விட்டவர் சிந்து துலானி. சுள்ளானில் தனுஷுக்கு ஜோடி போட்டுகலக்கினார். பிறகு மன்மதன் படத்தில் சிம்புவின் இதயத்தை சிதறடித்த காதலியாகவந்து அசத்தினார்.

அதன் பிறகு ஒத்தை பாட்டுக்கு இரு படங்களில் ஆடியதோடு சிந்துவை தமிழ்ப்படங்களில் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் நடிக்கிறார், இந்தப் படத்தில்நடிக்கிறார் என்று செய்திகள்தான் வந்ததே தவிர சிந்துவைக் காணவில்லை. ஆனால்,தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்து முடித்தார்.

தற்போது மீண்டும் தலை பிளஸ் உடல் காட்ட வருகிறார் சிந்து. ரஞ்சித் கதாநாயகனாகநடிக்கும் பசுபதி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் சிந்து துலானி.

இது ஹீரோ படம் என்றாலும் சிந்துவுக்கும் நல்ல கேரக்டராம். கிளாமரும் கூடவேஉண்டாம். இந்தப் படத்தில் தனது முழுத் திறமையையும் கொட்டி, அடுத்தடுத்துபடத்தை அள்ள ஆசையாக இருக்கிறார் சிந்து. இதனால் படத்துக்காகஒட்டுமொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதை முடித்து விட்டுத்தான் அடுத்தபடமாம் (அதாவது கிடைத்தால்!)

சிந்துவைப் பார்த்து ரொம்ப நாளாயிற்றே என்று ஏங்கியவர்களுக்கு, வருகிறபுத்தாண்டில் சிந்துவை சந்திக்கும் வாய்ப்பு ஓடோடி வருகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil