»   »  ஜெயலட்சுமியாக சிந்து

ஜெயலட்சுமியாக சிந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

அலையடிக்குதே படத்தில் சிந்து துலானி நடிக்கும் பாத்திரம் ஜெகஜால ஜெயலட்சுமியை மனதில் வைத்துஉருவாக்கப்பட்டுள்ளதாம்.

காக்கிகளின் காம வேட்டையை தோலுரித்த சிவகாசி ஜெயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றில் மெய்மறந்து போன தயாரிப்பாளர்கே. ராஜன் அவரது வாழ்க்கையை படமாக எடுக்கிறேன் என்று சொன்னபோதே, ஒரு பெரிய அமெளன்டை வாங்கிக் கொண்டுஜெயலட்சுமி ஓ.கே. சொல்லியிருந்திருக்கலாம்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். கூடுதலாக காசு கேட்டார். இப்போது என்னடாவென்றால், இயக்குனர் காளிமுத்து, ஜெயலட்சுமிவாழ்க்கையை அப்படி, இப்படி உல்டா செய்து அலையடிக்குதே என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சமூகத்தில் சிலரால் சூறையாடப்பட்ட பெண் அவர்களை பழி வாங்குவதே கதை என்று மொட்டையாக சொன்னார்கள். ஆனால்,ஜெயலட்சுமியின் கதை தான் அலையடிக்குதே என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருப்பதாக கோலிவுட் குருவிகள் காதைக்கடிக்கின்றன.

இந்தப் படத்தில் சிந்து துலானி, அவரது தங்கை நேகா துலானி மற்றும் பிரபா ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது நமதுவாசகர்கள் அறிந்த விஷயம்.

இப்போது வாசகர்கள் அறிய வேண்டியது, ஜெயலட்சுமி வேடத்தில் தான் சிந்து துலானி நடிக்கிறார் என்பதுதான். படத்தில் இவரதுவாழ்வை சீரழிக்கும் வில்லன் வேடத்தை ஒரு சாமியார் பாத்திரமாக உருவாக்கியுள்ளார்களாம். ஜெயலட்சுமி கதைக்குள் காஞ்சிமட விவகாரத்தையும் முயற்சிக்கிறார்கள் போலும்.

தன் வாழ்க்கையை நாசமாக்கிய வில்லனை சிந்து துலானி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் அலையடிக்குதே படத்தின் கதை.

முதலில் இந்த வேடத்தில் நடிக்க மீனாவைத் தான் அணுகினார்கள். ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த கவர்ச்சியின் அளவுஷகீலா-மரியா லெவலுக்கு இருக்கவே, நோ சொல்லிவிட்டார்.

பின்பு, கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று கூறி, சிந்து துலானியின் கால்ஷீட்டை வாங்கிய இயக்குனர், படம்முழுவதும் சிந்து துலானியை டூ பீஸ் உடையில் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எரிச்சலான சிந்து வேற டிரஸ்ஸேகிடையாதா என்று சொல்லிவிட்டு காரி ஏற, அவரை சமாதானப்படுத்தி கொஞசம் பெரிய டிரஸ்ஸாக கொடுத்தார்களாம். அந்தஅளவுக்கு படத்தில் தாராளம், ஏராளம்.

இந்தப் படத்தில் நேகா துலானி நடிக்க நேர்ந்தது எப்படி என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. படத்தில் சிந்து துலானியுடன்இன்னொரு நடிகை கவர்ச்சி ஆட்டம் போடுவது போல் ஒரு பாட்டு.

இதில் நடிப்பதற்கு சிந்து துலானிக்கு இணையாக கவர்ச்சி காட்டக் கூடிய புதிய முகம் ஒன்று தேவைப்பட்டது.

இதை தெரிந்து கொண்ட சிந்து துலானி, சூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது தங்கையை கவர்ச்சியான உடைகளில் கூட்டி வந்து இயக்குனர்முன்பு அலையவிட்டிருக்கிறார்.

அதோடு தங்கைக்கும் தனக்கும் பேக்கேஜ் சம்பளம் கொடுத்தால் போதும் என்று தனது பி.ஆர்.ஓ. மூலம் தூது விட்டிருக்கிறார்.அதன்பிறகு நேகா துலானி ஒப்பந்தமானார் என்கிறார்கள்.

சிந்துவும் நேகாவும் ஆடிய அந்த பாடல் காட்சி 4 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் ஹைலைட்டே அந்தப் பாடல்காட்சிதான்என்று ஜொள்ளுகிறார்கள் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

தனது வழி கவர்ச்சி வழி என்ற முடிவுக்கு வந்து விட்ட சிந்து துலானி, அதற்குள் ஒரு பாட்டுக்கு ஆடவும் தயாராகிவிட்டார்.ஆக்ஷன் கிங் என்ற சுய பட்டம் கொடுத்துக் கொண்ட அர்ஜூன் நடிக்கும் சின்னாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் சிந்து.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil