»   »  சிந்து துலானி மீது சேர் வீச்சு!

சிந்து துலானி மீது சேர் வீச்சு!

Subscribe to Oneindia Tamil

அலையடிக்குதே படத்தின் ஷூட்டிங்கின்போது பெரிய கலாட்டாவாகி சேர் வீச்சு நடந்துள்ளதாம்.

சிவகாசி ஜெயலட்சுமி கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் அலையடிக்குதே. சிந்து துலானி நாயகியாகநடிக்கிறார். போனஸாக அவரது தங்கச்சி நேகா துலானியும் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

அக்காவும், தங்கையும் சேர்ந்து அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சியில் கலக்கி எடுத்து வரும் படம் இது. இதுவரை இல்லாதஅளவில், வரைறை இன்றி கவர்ச்சி காட்டி நடித்து வரும் சிந்து துலானிக்கும், படத்தின் இயக்குனருக்கும் சமீபத்தில் வாக்குவாதம்ஏற்பட்டு, அடிதடியில் முடிந்ததாம்.

கதைப்படி (இதைச் சொல்லியே எல்லாத்தையும் கழட்டிருவாங்கப்பா!) டூ பீஸ் உடையில் சிந்து துலானியை வரச்சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஏற்கனவே எக்குத் தப்பாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறேன். டூ பீஸ் எல்லாம் டூ மச், அதுவேண்டாமே என்று மறுத்துள்ளார் சிந்து.

இதனால் கோபமடைந்த இயக்குனர், எனக்கே டைரக்ஷன் சொல்லித் தர்றியா என்று ஆவேசமாக கேட்டுள்ளார். பதிலுக்குசிந்துவும் கோபமாக இந்தியில் திட்டியுள்ளார்.

அவ்வளவுதான், கடுப்பாகிப் போன இயக்குனர், அருகில் கிடந்த சேரை தூக்கி சிந்து மீது வீசியுள்ளார். "சைக்கிள் கேப்"பில் விலகிக்கொண்டதால், சிந்து சிந்தாமல் சிதறாமல் தப்பியுள்ளார்.

இயக்குனரின் கோபத்தைப் பார்த்து அரண்டு போன சிந்து அங்கிருந்து வேகமாக கிளம்பி காரில் ஏறிப் பறந்தாராம்.

பின்னர் கேப்டன் விஜயகாந்த்துக்குப் போனைப் போட்டு நேரில் பார்க்க வேண்டும் என்று பீதியான குரலில் கூறியுள்ளார். உடனேவரச் சொன்ன கேப்டன், நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டு இயக்குனரை அழைத்து, எதுக்கு இவ்ளோ டென்ஷன் என்றுகேட்டுள்ளார்.

டைரக்டரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். டூ பீஸ் உடையில் சிந்து நடித்தே தீர வேண்டும், எப்படியும் நடிக்கத்தயார் என்று சொல்லி தானே காசை கை நீட்டி வாங்கினார் என்று கூறி விட, சரி நடிப்பார், கோபப்படாமல் ஷூட்டிங்கைதொடருங்கள் என்று கூறி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.

சிந்துவுக்கு சில அறிவுரைகளை வாரி வழங்கி அனுப்பி வைத்தாராம் கேப்டன். எந்த டூ பீஸ் காட்சிக்காக கலாட்டா நடந்ததோ,அதே டூ பீஸ் காட்சியில் அடக்க, ஒடுக்கமாக நடித்துக் கொடுத்துள்ளாராம் சிந்து.

கவர்ச்சியான காட்சி என்றால் வலியாக வந்து நடித்துக் கொடுப்பவர் சிந்து. இதம், பதமாக சொல்லியிருந்தால் அலேக்காகநடித்துக் கொடுத்திருப்பார். அவரிடம் போய் இயக்குனர் எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆனார்..?

வேறு ஏதாவது விஷயம் இருக்குமோ?

நமக்கெதுக்குப்பா வம்பு..

அப்புறம், சென்னையில் சிந்து துலானி ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் டேரா போட்டிருக்கிறார். சாப்பாடும் அங்கே தான்.ஆனால், ஹோட்டலுக்கு அவர் பில் கட்டுவதே இல்லையாம். தங்கல், உணவு, இத்யாதி எல்லாமே இலவசமாம்.

எதுக்கு அப்படி?

நமக்கெதுக்குப்பா வம்பு...


Read more about: sindhu dhulani in trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil