»   »  சிந்தூரியின் தெலுங்காட்டம்

சிந்தூரியின் தெலுங்காட்டம்

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் சிந்தூரி தமிழில் தட்டுத் தடுமாறி வந்ததால், கடுப்பாகி தெலுங்குக்குத் தாவிவிட்டார்.

பாய்ஸ் படத்தில் நடித்த ஹரணியைத்தான் நிறைய பேருக்கு ஞாபகம் இருந்தது.ஆனால் கூடவே நடித்த சிந்தூரியை மறந்திருப்பார்கள். இதுதான் சிந்தூரிக்கு பெரியவிசனமாகி விட்டது.

ஷங்கர் இயக்கத்தில் நடித்தும் கூட தனக்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல்போனதால் பெரும் அப்செட்டில் இருந்தார் சிந்தூரி. நடிப்பு, துள்ளல் கிளாமர் எனஎப்படியும் அசத்த தான் தயாராக இருந்தும் தமிழ் சினிமாவாலாக்கள் கண்டுக்காமல்போனதால் அப்செட்டாக இருந்தார்.

இப்போது தான் பிரியமான காதல் என்று ஒரு தமிழ்ப் படம் கிடைத்தது. ஆனால், அந்தசூட்டிங் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

இதனால் விசனத்தில் இருந்த சிந்தூரி இப்போது தெலுங்கில் நுழைந்துள்ளார்.

அவர் நடிக்க உருவாகும் குண்டம்மகிரி மணவாடு என்ற புதிய படத்தின் பூஜைசமீபத்தில் நடந்தது. இதில் அவருக்கு ஜோடியாக அலி என்ற காமெடியன் நடிக்கிறார்.கூடவே நிக்கோல் என்ற அழகுப் பதுமையும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

இவருக்கு இது தான் முதல் தெலுங்குப் படம். மும்பையைச் சேர்ந்த நிக்கோலின்ஸ்டில்களில் உள்ள தைரியத்தைப் பார்த்தால் தெலுங்குவாலாக்கள் அவரை அவ்வளவுசீக்கிரத்தில் விட்டுவிட மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ், நம்ம ஊரு வடிவுக்கரசி, தெலுங்கு கிளாமர் கில்மாஜெயலலிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் உள்ளனர். இது முழு நீள காமெடிப்படமாம்.

காமெடிப் படமாக இருந்தாலும் கிளாமர் கில்லாடித்தனங்களுக்குக் குறைவில்லாமல்படு காரசாரமாக தெலுங்குக்கே உள்ள தோரணயோடு படத்தை எடுக்கவுள்ளார்கள்.

இப்படத்தின் மூலம் தெலுங்கில் தேட்டையை போட தயாராக இருக்கிறார் சிந்தூரி.இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தெலுங்கில்தான் நடிப்பாராம். அதேசமயம்,தமிழ் வாய்ப்புகள் வந்தால் அதையும் விடப் போவதில்லையாம்.

ரைட், ரைட்... போட்டும் போட்டும்..

Read more about: sinduri moves to telugu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil