தாஜ்மஹாலில் சிவகார்த்திகேயன்... பரபரப்பாக நடக்கும் டான் ஷூட்டிங் !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடித்த டாக்டர் திரைப்படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டான் முதல் கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் முடித்த படக்குழு இப்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தாஜ்மஹாலில் தஞ்சம் அடைந்திருக்க அங்கு சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜாலி மூவி
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபீஸில் கலக்கிகொண்டு உள்ளது. அந்த வகையில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து மிகச் சிறந்த குடும்ப திரைப்படமாக வெளியானது. அதைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த டாக்டர் திரைப்படத்தில் மருத்துவராக முதல் முறையாக நடித்துள்ளார்.

ஒடிடி ரிலீஸ்
விஜே அர்ச்சனா, தீபா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்க நடிகை பிரியங்கா அருள்முருகன் இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அனைத்து பணிகளும் முடிந்து டாக்டர் திரைப்படம் வெளியாக தயாராக இருக்க கொரோனா சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு தயாராகி வந்தது. இந்நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது.

காலேஜ் பாய்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லியிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வந்தது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக செம ஜாலியான வேடத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video

தாஜ்மஹாலில் டான்
சூரி,சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஆர்ஜே விஜய், காளி வெங்கட் , முனீஸ்காந்த் என பலர் டான் படத்தில் நடித்து வர இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் இப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக தான் படக்குழு இப்பொழுது டெல்லியில் உள்ள தாஜ்மஹாலில் தஞ்சமடைந்துள்ளது.

ரொமான்ஸ் சீன்
இங்கு சில காதல் காட்சிகள் எடுக்கப்பட சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இங்கு படம் பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலில் டான் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதையொட்டி சிவகார்த்திகேயன் அங்கு எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதையொட்டி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











