Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரச்சனை எல்லாம் ஓவர்.. மீண்டும் தொடங்கியது.. சிவகார்த்திகேயனின் அந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படம்!
சென்னை: ஆர்.டி. ராஜாவின் 24 ஏ.எம் தயாரிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் மீண்டும் தொடங்கியுள்ளது.
'இன்று நேற்று நாளை' எனும் டைம் மெஷின் படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் படம் ஒன்றை இயக்க முன்வந்தார்.
கடன் பிரச்சனை காரணமாக ஆர்.டி. ராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கிடப்பில் கிடந்த அந்த படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
காட்டுக்குள் நடந்த ரஜினி.. கண்டு களித்த மலரும்.. காலில் குத்திய முள்ளும்.. கலகலனு சென்னை ரிட்டர்ன்!
இசைப்புயல்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடி ஆட வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் சின்ன வயசு கனவு இந்த படத்தில் நிறைவேறப் போகிறது என ஆசை ஆசையாக பேட்டி எல்லாம் கொடுத்தார். ஆனால், படம் பாதியிலே நின்று போனது. தற்போது மீண்டும் படம் துவங்கியுள்ளதால், விரைவில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.டி. ராஜா
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே படங்களுக்கு கிரியேட்டிவ் புரொடியூசராக இருந்த ஆர்.டி.ராஜா, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்களை தயாரித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஆர்.டி. ராஜா நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து தயாரித்து வருகிறது. ரவிக்குமாரின் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் நின்று போன நிலையில், அந்த படத்தையும் தயாரிக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
|
மீண்டும் துவங்கியது
இந்நிலையில், ஆர்.டி.ராஜா தனக்கு ஏற்பட்ட நிதி சிக்கல்களை சமாளித்து மீண்டுள்ளார். பிரச்சனைகள் தீர்ந்தது எனவும், கிடப்பில் கிடந்த ரவிக்குமார் - சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை மீண்டும் துவங்கவுள்ளதாகவும், நேற்று இரவு 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
|
ரகுல் ப்ரீத் சிங்
மேலும், இன்னும் கடைசி இரண்டு ஷெட்யூல் மட்டுமே அந்த படத்தில் மீதம் உள்ளதாகவும் விரைவில் படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.