ரணகள ஏரியாவில் அதகள ஷூட்டிங்.. தொடங்கியது 'டாக்டர்' கோவா ஷெட்யூல்... டீமோடு இணைந்த சிவகார்த்தியேன்
சென்னை: 'டாக்டர்' படத்துக்காக நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்க நடிகர் சிவகார்த்திகேயன் கோவா சென்றுள்ளார்.
மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்துக்கு பிறகு அயலான் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

மூன்று வேடங்களில்
ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இஷா கோபிகர், பாலசரவணன், பானுப்பிரியா, யோகிபாபு, கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். பைனான்ஸ் பிரச்னை காரணமாக சில காலம் நடக்காமல் இருந்த இதன் ஷூட்டிங், இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

ஏலியனுக்கும்
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இதில், ரகுல் பிரீத் சிங் விண்வெளி வீராங்கனை யாக நடிக்கிறாராம். இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் முக்கியமான படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் சென்னையில் சமீபத்தில் முடிவடைந்தது. அயலான் படத்திலும் நெல்சன் இயக்கும் டாக்டர் படத்திலும் மாறி மாறி நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

பிரியங்கா மோகன்
அயலான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, 'டாக்டர்' படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் கதை சென்னையில் கோவாவிலும் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில், நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

கோவாவில் ஷூட்டிங்
இவர், கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக கேங்க் லீடர் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட டாக்டர் படத்தின் ஷூட்டிங் கோவாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக நடிகர் சிவகார்த்தியேன் நேற்று அங்கு புறப்பட்டுச் சென்றார். இதன் ஷூட்டிங் இன்னும் சில நாட்கள் அங்கு நடைபெறும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications