சிவகார்த்திகேயனின் டான் பட ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் புகைப்படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.

100 கோடி நாயகன்

100 கோடி நாயகன்

தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களே இணைந்துள்ள 100 கோடி எலைட் கிளப்பில் டாக்டர் படம் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த ஆண்டு ஆடியது.

காலேஜ் பாயாக

காலேஜ் பாயாக

மிலிட்ரி டாக்டராக டாக்டர் படத்தில் ரொம்பவே மெச்சூரான ரோலில் நடித்து அசத்திய சிவகார்த்திகேயன் தனக்கே உரித்தான குறும்புத் தனங்களுடன் பட்டையை கிளப்ப டான் படத்தில் காலேஜ் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை இந்த படத்தில் படு யங்காகவும் எனர்ஜெடிக்காகவும் காட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷூட்டிங் ஓவர்

ஷூட்டிங் ஓவர்

டாக்டர் படம் முடிந்த கையோடு தமிழ் மற்றும் தெலுங்கு என சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட மார்க்கெட் ஓப்பன் ஆகி உள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த டான் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் கேரவனில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டான் படத்திற்கு பிறகு சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Don Shooting முடித்து பழனி கோவில் வேண்டுதலை முடித்த Sivakarthikeyan
ஒரே மாதத்தில் இரண்டு படம்

ஒரே மாதத்தில் இரண்டு படம்

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா மோகனுக்கு வரும் ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைய போகிறது. வரும் பிப்ரவரி மாதம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் என இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.

விஜய்சேதுபதி உடன் மோதல்

விஜய்சேதுபதி உடன் மோதல்

அதே நேரத்தில் விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கிளாஷ் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களில் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X