சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' கோவா ஷெட்யூல் ஓவர்.. அடுத்த அப்டேட் கொடுக்கலாம்ல.. கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் கோவா ஷெட்யூல் முடிவடைந்துள்ளது.
மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்துக்கு பிறகு அயலான் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

மூன்று வேடங்களில்
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இஷா கோபிகர், பாலசரவணன், பானுப்பிரியா, யோகிபாபு, கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். பைனான்ஸ் பிரச்னை காரணமாக சில காலம் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கியது. இதில், சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

விண்வெளி வீராங்கனை
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இதில், ரகுல் பிரீத்சிங் விண்வெளி வீராங்கனை யாக நடிக்கிறாராம். தமிழில் முக்கியமான படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் சென்னையில் சமீபத்தில் முடிவடைந்தது. அயலான் படத்திலும் 'டாக்டர்' படத்திலும் மாறி மாறி நடித்து வந்தார் ஹீரோ சிவகார்த்திகேயன்.

பிரியங்கா மோகன்
அயலான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, 'டாக்டர்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதை நெல்சன் இயக்குகிறார். இவர் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவர். இதன் கதை சென்னையிலும் கோவாவிலும் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயின்.

கோவாவில் ஷூட்டிங்
இவர், கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக கேங்க் லீடர் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட 'டாக்டர்' படத்தின் ஷூட்டிங் கோவாவில் தொடங்கி நடந்து வந்தது. இதற்காக நடிகர் சிவகார்த்தியேன் கடந்த 13 ஆம் தேதி அங்கு சென்றார். ஷூட்டிங் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications