»   »  நவ்யாவும், அப்பாசாமியும்!

நவ்யாவும், அப்பாசாமியும்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் ஹீரோக்களுக்கு மேலும் ஒரு அழகான "அம்மா கிடைத்து விட்டார். இந்த அம்மா சும்மா கிடையாது, சூப்பர் ஹீரோக்களுடன் முன்பு ஜோடியாக வேடம் கட்டிகலக்கியவர்.

கீதா தான் அந்த புதிய அம்மா. "பைரவி படத்தில் அறிமுகமாகி ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சத்யராஜ் என பெத்த ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துகலக்கியவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களில் பல்வேறு வகையான வேடங்களில் நடித்து கொடி கட்டிப் பறந்தவர்.

கமல்ஹாசன் தயாரித்த "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு படத்தில் விலைமாதுவாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கே.பாலச்சந்தரின் "புதுப் புது அர்த்தங்களில்ரகுமான் மீது தீவிரக் காதல் கொண்டிருந்த தீவிரவாத காதலியாக வந்து பயமுறுத்தியவர்.

காலப் போக்கில் கீதாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. போதாக்குறைக்கு உடம்பும் பெருக்கத் தொடங்கியது. இதனால் படங்களில் நடிப்பதை விட்டு விட்டகீதா, திடீரென பால்சந்தரின் தொலைக்காட்சித் தொடர்களில் தலை காட்டத்தொடங்கினார்.

இந்த நிலையில் தான் அவரைத் தேடி மீண்டும் ஒரு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் ஹீரோயின் வேடத்திற்கு அல்ல, விஜய்யின் அம்மாவாக நடிப்பதற்கு. விஜய்என்பதால் உடனே ஒத்துக் கொண்டு விட்டார் கீதா.

தீபாவளிக்கு வரும் "சிவகாசி படத்தில் தான் விஜய்யின் அம்மாவாக நடிக்கிறார் கீதா. இதுவரை ஹீரோயின் வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கீதா, அதற்கு அடுத்தகட்ட ரோல்களுக்கு வருவது இதுவே முதல் முறை. அதிலும் முன்னணி ஹீரோ ஒருவருக்கு அம்மா வேடம் கட்டுவதும் இதுவே முதல்முறை.

அம்மா கேரக்டர் என்றாலும் பவர்ஃபுல் வேடமாக இதை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் பேரரசு. இந்தப் படத்தில் வெல்டிங் மெக்கானிக்காக நடிக்கிறார் விஜய்.அவரது பெயர் தான் சிவகாசி.

இதே படத்தில் விஜய்யின் தங்கச்சியாக நடிக்க ஸ்ரீதேவிகாவை முயற்சித்து வந்தார்கள். சேச்சி ரொம்ப தயங்கவே, அட்சயா என்ற இன்னொரு பாலக்காட்டு தங்கச்சியைக்கூப்பிட்டு வந்து அந்த ரோலில் போட்டுள்ளார்களாம்.

ஏற்கனவே அழகான அம்மாவாக "எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் வேடம் கட்டிய நதியா, அடுத்த படங்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால்அவரை கோடம்பாக்கத்தில் இருந்து ஒதுக்கி விட்டனர்.

இதனால் அவர் அடுத்த பிளைட் பிடித்து மீண்டும் அமெரிக்காவிலேயே ஐக்கியமாகி விட்டார். இதனால் நதியாவின் இடத்தை கீதா பிடித்து விடுவார் என்று நம்பலாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil