வெடுக் வெடுக் இடுப்பழகியின் படப்பிடிப்பை நிறுத்திய பாம்புகள்: ஷாக் வீடியோ
Recommended Video

மும்பை: கலன்க் படப்பிடிப்பு பாம்புகளால் தடைபட்டுள்ளது.
கரண் கோஹார் தயாரிப்பில், அபிஷேக் வர்மன் இயக்கத்தில் முன்னாள் காதலர்களான மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர், குனால் கேமு உள்ளிட்டோர் நடிக்கும் படம் கலன்க்.
தற்போது வருண், ஆலியா, மாதுரி, குனால் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
பாம்பு
ஆலியா, வருண் தவான் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு பெரிய பாம்புகள் வந்துள்ளன. பாம்புகளால் சுமார் ஒரு மணிநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்புகளை பிடித்து காட்டில் விட்டனர்.

அபிஷேக்
தற்போது கலன்க் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் முன்னதாக கரண் ஜோஹார் இயக்கிய மை நேம் இஸ் கான் படப்பிடிப்பு நடந்தது. அபிஷேக் வர்மன் துணை இயக்குனராக இருந்த அப்போதும் பாம்புகளால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோஹார்
கலன்க் கரண் ஜோஹாரின் கனவு படம். அவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த படத்தை எடுக்க உழைத்துள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மாதுரியும், சஞ்சய் தத்தும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

சஞ்சய்
ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த மாதுரி தீக்ஷித்தும், சஞ்சய் தத்தும் தற்போது கலன்க் படம் மூலம் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











