மீண்டும் ஸ்னேகா-ஷாம்
நீண்ட இடைவெளிக்கு பின் ஷாமும், ஸ்னேகாவும் சிவம் படம் மூலம் இணைகிறார்கள்.
நல்ல நடிப்புத் திறமை இருந்தும் நீண்ட நாட்களாக கோடம்பாக்கத்தில் ஒரு நிந்தர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டு இருப்பவர் ஷாம்.இவர் நடித்த முதல் படமான 12 பி சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இவருக்கு அதன்பின் சொல்லிக் கொள்ளும் படி எந்த படமும் வரவில்லை. அவ்வப்போது ஓரிரு படங்களில் வந்து போனார்.
குறிப்பாக இயற்கை, ஏபிசிடி, உள்ளம் கேட்குமே என தான் நடித்த அனைத்து படத்தில் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நன்றாகவே நடித்தார். ஆனாலும் தொடர்ந்து படம் எதுவுமின்றி தத்தளித்து வந்தார்.
இப்போது வேந்தன் இயக்கத்தில் உருவாகும் சிவம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் தூறல் என பெயர் வைத்திருந்தார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, இப்போது சிவம் என்று மாற்றிவிட்டார்கள்.
இதில் ஷாமுக்கு ஜோடி ஸ்னேகா. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க மற்றும் ஏபிசிடி ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.ஏய் நீ ரொம்ப.. படப்பிப்பின்போது ஒரு பாடல் காட்சியில் ஸ்னேகா இவரை முகத்தில் அறைந்ததாக பரபரப்பு எழுந்தது.
இந் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது மீண்டும் இருவரும் இணைகின்றனர். இதில் ஷாம் ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.
இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சுலோச்சனா.ஷாமின் அம்மாவாக நடிக்கிறார்.
இந்தப் படமாவது தனக்கு ஒரு பிரேக்கை தரும் என்ற நம்பிக்கையில் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஷாம். ஆட்டோ பிரேக் பிடிச்சா சரி...


Click it and Unblock the Notifications











