»   »  மீரா-ஸ்னேகா நற நற

மீரா-ஸ்னேகா நற நற

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக் லெவலுக்கு மீரா ஜாஸ்மினும், ஸ்னேகாவும்சமீபத்தில் உரசிக் கொண்டார்களாம். ஆனால் ல்ல வேளையாக அடிதடி ஏதும்நடக்கவில்லை.

தமிழில் வாய்ப்பிழந்து போன ஸ்சினேகா இப்போது தெலுங்கிலும் மலையாளத்தில்தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மம்மூட்டியுடன் துருப்பு குளான் என்ற படத்தில்ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

மலையாளத்திலேயே அதிக சம்பளம் (அதிகமில்லை 25 லகரம்தான்!) வாங்கும்நடிகை என்ற புதிய ரெக்கார்டையும் ஏற்படுத்தியுள்ளார்.


படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்டுள்ள ஸ்னேகா, எர்ணாகுளத்தில் உள்ள ஒருஹோட்டலில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் மீரா ஜாஸ்மினும் எதேச்சையாகவந்து தங்கியுள்ளார்.

அவர் மோகன்லால் படத்தில் நடிப்பதற்காக எர்ணாகுளம் வந்தவர்,

ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் நிலை ஏற்பட்டதாம். ஆனால்முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு உதட்டை ஒரு சுழி சுழித்தபடி இருவரும்டக் டக்கென ஒருவரை ஒருவர் கிராஸ் செய்து போய் விட்டார்களாம்.

போன வேகத்தில் தங்களது தயாரிப்பாளரைக் கூப்பிட்டு எனக்கு உடனே வேறஹோட்டலை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.


ஆனார் தயாரிப்பாளர்கள் அதெல்லாம் முடியாது, நினைத்த ரேத்தில் ஹோட்டலைமாற்ற இது என்ன கோலிவுட்டா? (அதான, தமிழ்ல தானே ஏமாளிகள் ஜாஸ்தி).இருக்குற ஹோட்டலிலேயே அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று ஸ்ட்ரிக்ட்டாககூறி விட்டார்களாம்.

இதனால் எரிச்சலாகிப் போன இருவரும் வேறு வழியில்லாமல் அதேஹோட்டலிலேயே தங்கியுள்ளனர். ஆனாலும் மீரா வேறு ஹோட்டலுக்குப் போய்விட்டாராம்.

இருவருக்கும் அப்படி என்ன பிரச்சினை? இதற்கு பொதுவான ஒரு காரணம், ஒருகாலத்தில் இருவருமே நடிகர் ஸ்ரீகாந்த்துடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர்கள். ஒருகட்டத்தில் இருவருமே ஸ்ரீகாந்த்தைப் பிடிப்பதற்கு கடுமையாக முயற்சித்தவர்களும்கூட என்று கிசுகிசுக்கப்பட்டதுண்டு.

ஆனால் ஸ்னேகாவிடம் மடங்கினார் ஸ்ரீகாந்த். இதனால் ஸ்னேகா மீது மீராவுக்கு ஒருகாட்டம். அதேபோல சமீப காலமாக ஸ்ரீகாந்த்துடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திவைத்துள்ளார் மீரா.


ஸ்ரீகாந்த் கூட மீரா ரொம்ப நல்ல நடிகை, மெர்க்குரிப் பூக்கள் படப்பிடிப்பின்போதும்,ஜூட் படத்தின்போதும் என்னுடன் நன்கு ஒத்துழைத்து நடித்தார் என்று ஜொள்ளாராம்சூட்டியிருந்தார்.

இப்போது ஸ்ரீகாந்த்துடன் ஸ்னேகா பெரிய டிஸ்டன்ஸை மெயின்டெயின் செய்தாலும்பழைய லடாய்கள் காரணமாகவே மீராவை நேரில் பார்த்ததும் சூடாகி விட்டாராம்.

சமீபத்தில்தான் நவ்யா நாயரும், ரேணுகா மேனனும் தலைமுடியைப் பிடித்து கட்டிப்புரண்டு களேபரம் செய்தார்கள். ஆனால் மீராவும், ஸ்னேகாவும் அந்த அளவுக்குப்போகவில்லையே என்று மலையாளத் திரையுலகினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil